மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை முதலீட்டு சபையின் விசேட தீர்மானம்!

- Advertisement -

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தை மூடுவது தொடர்பில் எதுவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் மூடப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து முதலீட்டு சபை  இதனை தௌிவுபடுத்தியுள்ளது.

- Advertisement -

எவ்வாறாயினும் பணியாளர்கள் சிலருக்கு பி சி ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெறுபேறுகள் வெளியானதன் பின்னரே தீர்மானங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்ட மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை மாத்திரமே தற்போது மூடப்பட்டுள்ளதாகவும்  இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

PCR தொடர்பில் பண்டாரகம பிரதேச சபைத் தலைவர் முன்வைக்கும் குற்றச்சாட்டு!

பண்டாரகம - அட்டுலுகம பகுதியில், பல தரப்பினர் PCR பரிசோதனையை தவிர்த்து செயற்படுவதாக பண்டாரகம பிரதேச சபைத் தலைவர் தேவேந்திர பெரேரா தெரிவித்துள்ளார். அட்டுலுகம பகுதியில் இதுவரை 164 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக...

பிரான்ஸ் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி இடைநிறுத்தம்- காரணம் என்ன?

பிரான்ஸில் PARRIS நகரில்  கறுப்பு இனத்தவரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அந்தநாட்டு பொலிஸ் அதிகாரிகள் மூவர், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் கருப்பினத்தைச் சேர்ந்த இசைத் தயாரிப்பாளர் ஒருவரை PARRIS பொலிஸ் அதிகாரிகள் தாக்கிய சம்பவம், காணொளி...

99 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு – முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 99 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை நேற்று நள்ளிரவு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

கடல்சார் பாதுகாப்பு தொடர்பான நான்காவது முத்தரப்பு சந்திப்பு இன்று!

கடல்சார் பாதுகாப்பு தொடர்பான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான நான்காவது முத்தரப்பு சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பை இம்முறை நடத்தும் வாய்ப்பை இலங்கை...

Developed by: SEOGlitz