மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற நால்வருக்கு கொரோனா!

- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்றின் அச்சநிலைமைக் காரணமாக யாழ்ப்பாண நகரில் உள்ள சில கடைகள் சுகாதார துறையினரால் மூடப்பட்டுள்ளன.

கடந்த 25 ஆம் திகதி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

இவர்கள் கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளர் மற்றும் அதன் பணியாளர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறித்த நபர்களிடம் முன்னெடுக்கபட்ட விசாரணைகளில், அவர்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், அவர்கள் சென்றுவந்த கடைகள் மற்றும் உணவகங்கள், சிகையளங்கார நிலையம் என்பன சுகாதார அதிகாரிகளினால் மூடப்பட்டுள்ளது.

மேலும், தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் வசிக்கும் பகுதிகளை அண்மித்தவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த நான்கு பேரும், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற பஸ்ஸில் பயணித்தவர்களை தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் சுகாதார தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பஸ்ஸானது கடந்த 25 ஆம் திகதி இரவு 10 மணிக்கு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணித்துள்ளமை கவனிக்கத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கெப்பிட்டல் எப்.எம் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா : நிறைவேற்றுப் பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி!

கெப்பிட்டல் எப்.எம் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினையொட்டி நிறுவனத்தினது பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் லீ சிங் மேயின் வாழ்த்துச் செய்தி.. "கெப்பிட்டல் எப்எம் இன் இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்த, ஆதரவாக இருக்கின்ற...

கெப்பிட்டல் எப்.எம்மின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா : முகாமைத்துவப் பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி!

கெப்பிட்டல் எப்.எம் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினையொட்டி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுமதி வின்சேந்திர ராஜனின் வாழ்த்துச் செய்தி.. "கெப்பிட்டல் எப்.எம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடுவதில் நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம். எமது...

கெப்பிட்டல் எப்.எம்மின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா : நிறுவனத் தலைவரின் வாழ்த்துச் செய்தி!

கெப்பிட்டல் எப்.எம் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினையொட்டி நிறுவனத் தலைவர் சதாசிவம் வின்சேந்திர ராஜனின் வாழ்த்துச் செய்தி.. கெப்பிட்டல் எப்.எம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினைப் பெருமையுடன் கொண்டாடுவதில் நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம். நாம்...

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 32 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிசெயற்பட்ட மேலும் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர  காலப்பகுதிக்குள் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா...

கெப்பிட்டல் எப்.எம் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா : பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி!

கெப்பிட்டல் எப்.எம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடும் நிலையில், அந்நிறுவனத்தின் பணிப்பாளர் விதுர்ஷன் வின்சேந்திர ராஜனின் வாழ்த்துச் செய்தி.. கெப்பிட்டல் எப்.எம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடுவதில் பெருமை...

Developed by: SEOGlitz