மெய்ப்பொருள் காண்பது அறிவு

20ஆவது திருத்தத்தில் சர்வஜன வாக்கெடுப்பைக் கோரும் திருத்தங்கள் உள்ளடக்கப்பட மாட்டாது: நீதி அமைச்சு!

- Advertisement -

20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்போது, சர்வஜன வாக்கெடுப்பைக் கோரும் திருத்தங்கள் உள்ளடக்கப்பட மாட்டாது என நீதி அமைச்சு கூறியுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 21ஆம் திகதி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் நீதி அமைச்சு கூறியுள்ளது.

- Advertisement -

மேலும், 20ஆவது திருத்த சட்ட மூலம் தொடர்பில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் ஏற்கனவே உயர்நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த திருத்தங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதானால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடன் அதனை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த திருத்தங்கள், உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்புக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் எனவும் நீதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் நடவடிக்கை அறிமுகம்

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்கும் புதிய வழிமுறையொன்றினை   கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி  அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில்  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நிலையில்,...

கொரோனா தொற்று – புதிய செயலி அறிமுகம்

கொரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல்களை சேகரிக்கும் வகையில் புதிய (APP) செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள்,...

மேலும் 168 கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 168 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் விடுத்த அறிவித்தல்!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக வீட்டில் இருந்து தொழில் புரியும் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களுக்கே...

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்கர்ளுக்கு இஸ்ரேல் கடவுச்சீட்டு – மைக் பொம்பியோ அறிவிப்பு!

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்க மக்கள் இஸ்ரேலிய கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ள முடியும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அறிவித்துள்ளார். இதன்படி, குறித்த அமெரிக்க மக்கள் தமது கடவுச் சீட்டுகளில் பிறந்த...

Developed by: SEOGlitz