மெய்ப்பொருள் காண்பது அறிவு

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளை நடாத்துவதில் சிக்கல்- ஜோசப் ஸ்டாலின்!

- Advertisement -

கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளை நடாத்துவதில் நடைமுறை சிக்கல்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைக் கூறியுள்ளார்.

- Advertisement -

தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றும்போது பரீட்சை மண்டப ஊழியர்கள் சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்கள் பரீட்சை மண்டபத்தில் இருந்து மீண்டும் வெளியே செல்லும் போது ஏனைய மாணவர்களுடன் அவர்கள் கலப்பதன் காரணமாக இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே பொது சுகாதார பரிசோதகர்களின் ஊடாக இவ்வாறான பரீட்சை மத்திய நிலையங்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறும் 22 நாட்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்காக ஆயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், குறித்த ஆயிரம் ரூபா தொகையை அதிகரிக்க இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் நடவடிக்கை அறிமுகம்

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்கும் புதிய வழிமுறையொன்றினை   கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி  அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில்  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நிலையில்,...

கொரோனா தொற்று – புதிய செயலி அறிமுகம்

கொரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல்களை சேகரிக்கும் வகையில் புதிய (APP) செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள்,...

மேலும் 168 கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 168 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் விடுத்த அறிவித்தல்!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக வீட்டில் இருந்து தொழில் புரியும் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களுக்கே...

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்கர்ளுக்கு இஸ்ரேல் கடவுச்சீட்டு – மைக் பொம்பியோ அறிவிப்பு!

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்க மக்கள் இஸ்ரேலிய கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ள முடியும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அறிவித்துள்ளார். இதன்படி, குறித்த அமெரிக்க மக்கள் தமது கடவுச் சீட்டுகளில் பிறந்த...

Developed by: SEOGlitz