மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில்!

- Advertisement -

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் கட்டுநாயக்க உட்பட 19 பொலிஸ் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை மொத்தமாக 203 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இன்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அத்துடன் முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் உட்பட 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஊரடங்கு உத்தரவை மதித்து செயற்படுமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் பொருட்கொள்வனவுக்கு இன்றும் நாளையும் அனுமதி வழங்கப்பட மாட்டாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கைக்குண்டு வெடித்ததில் இரண்டு சிறுவர்கள் காயம்!

வவுனியா, இரணை இலுப்பைக்குளம் பகுதியில் கைக்குண்டொன்று வெடித்ததில் இரண்டு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். இதற்கமைய, குறித்த சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 மற்றும் 11 வயதுடைய இரு சிறுவர்களே...

அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்த சூடான் அரசியல் கட்சிகள்!

இஸ்ரேலுடன் சுமூகமான உறவைப் பேணும் அரசாங்கத்தின் தீர்மானத்தை சூடான் அரசியல் கட்சிகள்  நிராகரித்துள்ளன. இந்த நிலையில், குறித்த ஒப்பந்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சியொன்று உறுவாக்கப்படுமென சூடான் அதிகாரிகள் எதிர்வுகூறியுள்ளனர். நாடுகளுக்கிடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவர இணங்கியுள்ளதாக இஸ்ரேல்,...

ரத்தொட்டையில் வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன…

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ரத்தொட்டை நகரில் அமைந்துள்ள ஐந்து வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ரத்தோட்டை, கிரிமெட்டிய பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் ரத்தொட்டை நகரில் சஞ்சரித்துள்ளார். இதனை...

கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு! சற்று முன் விடுத்த தகவல்!

கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிகடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று மாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது!

மேல் மாகாணத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள்ளே இந்த...

Developed by: SEOGlitz