மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாடின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள திகதி நிர்ணயம்!

- Advertisement -

தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி, ரிஷாட் பதியுதீனினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.

இதற்கமைய, குறித்த மனுவை எதிர்வரும் 20 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

- Advertisement -

குறித்த மனு, குமுதினி விக்ரமசிங்க மற்றும் சோபித ராஜகருணா ஆகிய நீதிபதிகள் முன்னிலையில், எதிர்வரும் 20 ஆம் திகதி  கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மனுவின் பிரதிவாதிகளாக, பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் எஸ்.பி ரணசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதர் காமினி உள்ளிட்ட ஏழு பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில், இடம்பெயர்ந்த வாக்காளர்களை புத்தளத்திலிருந்து மன்னார் வரை வாக்களிப்பதற்காக அழைத்துச் சென்றதன் ஊடாக, அரச நிதியை மோசடி செய்ததாக குறிப்பிட்டு, தன்னைக் கைது செய்ய முயற்சிப்பதாக ரிஷாட் பதியுதீன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பொது உடமைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்ய முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தன்னைக் கைது செய்வதற்கு பிடியாணை ஒன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு, சட்டமா அதிபரினால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி, ரிஷாட் பதியுதீனினால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு! சற்றுமுன் வெளியான தகவல்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 120 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்த மினுவாங்கொடை கொரோனா தொற்றாளர்கள் 37 பேர் மற்றும்  அவர்களுடன் நெருங்கிப் பழகிய 83 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று...

சாரா என்ற புலஸ்தினி வழக்கு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சாரா என்ற புலஸ்தினி எனும் நபர் தொடர்பாக தகவல் வழங்கிய நபரிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்த வழக்கு, தேவை ஏற்படின் மீண்டும் அழைக்கப்படும் என கல்முனை நீதிமன்ற...

உலக வர்த்தக மையத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று!

கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள நிறுவனமொன்றின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக வர்த்தக மையம் வெளியிட்டுள்ள...

அனைத்து குடும்பங்களுக்கும் 5000 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும்- சாள்ஸ் நிர்மலநாதன்

அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு நாட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே  அவர் இவ்வாறு...

அரசாங்கம் மீது குற்றம் சுமத்திய நாடாளுமன்ற உறுப்பினர்!

ரிஷாட் பதியுதீனின் பெயரைப் பயன்படுத்தி அரசாங்கம் நாட்டில் பல்வேறு விடயங்களை மறைத்து வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் தெரிவித்துள்ளார் நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார், CAPITAL...

Developed by: SEOGlitz