மெய்ப்பொருள் காண்பது அறிவு

கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி ரிஷாட்டினால் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!

- Advertisement -

தான் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தனது வழக்கறிஞர் மூலம் குறித்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ளார்.

- Advertisement -

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில், தேர்தல் சட்டங்களை மீறி, வாக்காளர்களுக்கு போக்குவரத்து சேவைகளைப் பெற்றுக் கொடுத்ததாக ரிஷாட் பதியுதீன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கைப் போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்தி, வாக்காளர்களுக்கு குறித்த போக்குவரத்து சேவைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளதாக ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ரிஷாட் பதியுதீனைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபரினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து ரிஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் 6 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இமயமலை எல்லையை தாண்டி இந்திய நாட்டுக்குள் பிரவேசித்த சீன இராணுவர் திருப்பி அனுப்பி வைப்பு!

இமயமலைப் பகுதியில் எல்லை தாண்டி தமது நாட்டுக்குள் பிரவேசித்த சீன இராணுவ சிப்பாய் ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீன மக்கள் விடுதலை இராணுவத்தை சேர்ந்த குறித்த சிப்பாய், நேற்று...

ட்ரம்ப் தன்னிடம் சீன வங்கிக் கணக்கொன்று உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னிடம் சீன வங்கிக் கணக்கொன்று உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னணி நாளிதழான நியூயோர்க் டைம்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த சீன வங்கிக் கணக்கானது Trump...

அமெரிக்காவின் வொஷிங்டன் நீதிமன்றத்தில் சிவில் வழக்கொன்று தாக்கல்!

சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் Mohammed bin Salman க்கு எதிராக அமெரிக்காவின் வொஷிங்டன் நீதிமன்றத்தில் சிவில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபிய ஊடகவியலாளரான ஜமால் கஷோக்கியைக் கொலை செய்ய உத்தரவிட்டதாகக் குற்றஞ்சாட்டி...

கொரோனா தொற்றின் அச்சம்: பேலியகொட மீன் சந்தை மூடப்பட்டது

பேலியகொட மொத்த விற்பனை மீன்சந்தை தொகுதியானது தற்காலிகமான மூடப்பட்டுள்ளது. பேலியகொட மொத்த விற்பனை மீன்சந்தை தொகுதியில் தொழில்புரியும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்தே,  இந்த நடவடிக்கை முன்னெடுக்க்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முன்னெடுக்கபட்ட...

நைஜீரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பலர் உயிரிழப்பு!

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதன்படி, குறைந்த பட்சம் 20 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...

Developed by: SEOGlitz