மெய்ப்பொருள் காண்பது அறிவு

முல்லைத்தீவில் கெப்பிட்டல் ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

- Advertisement -

முல்லைத்தீவு பிரதேசத்தில் எமது பிராந்திய செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோதமான மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் இன்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் எமது கெப்பிட்டல் செய்தியின் பிராந்திய செய்தியாளரான சண்முகம் தவசீலனுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

அத்துடன், சண்முகம் தவசீலனுடன் செய்தி சேகரிக்கச் சென்ற மற்றுமொரு ஊடகவியலாளர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் கெப்பிட்டல் ஊடகவியலாளர் மீது தாக்குதல்! 1

முல்லைத்தீவில் கெப்பிட்டல் ஊடகவியலாளர் மீது தாக்குதல்! 2

தொடர்புபட்ட செய்திகள்

Related News

லங்கா பிரீமியர் லீக் : Galle Gladiators துடுப்பாடத் தீர்மானம்!

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில், Jaffna Stallions மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச...

அஞ்சலி செலுத்துவதற்கு தயாரான அருட்தந்தை யாழில் கைது!

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக கூறப்பட்டு அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலையைச் சேர்ந்த அருட்தந்தை பாஸ்கரனே யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு முன்பாக வைத்து இன்று மாலை 5.50 மணியளவில் யாழ்ப்பாணம்...

மீனவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும் :

கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் உரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை முன்வைத்துள்ளார். வரவுசெலவு திட்டம் மீதான இன்றை குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே...

களுபோவில பிரதேசத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தெஹிவளை , களுபோவில பிரதேசத்தின் கெவும்வத்தை பகுதியில் 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். களுபோவில பிரத்திபிம்பாராம கெவும்வத்தை பகுதியிலேயே கொரோனா தொற்றாளர்கள் எண்மர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொகுவள பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்றையதினம் 30...

குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

முல்லைத்தீவில் அம்புலன்ஸ் வண்டி மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் 13 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு, ஜயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு...

Developed by: SEOGlitz