மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் சில பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவும்!

- Advertisement -

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஊவா மற்றும் கிழக்கு சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு  வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களின் காற்றின் வேகமானது அதிகரித்து காணப்படுவதோடு, அதனால் ஏற்படும் அனர்தங்களில் இருந்து பாதுகாப்பாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வடக்கு, வடமத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும், மத்திய மலைநாட்டின் மேற்கு மலை சரிவுகளிலும் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது 60  கிலோமீட்டர் வேகத்தில் காணப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புத்தளம் முதல் மன்னார் ஊடாக, காங்கேசன்துறை வரையிலான கடற்பிராந்தியங்களில் 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் பெய்துவரும் மழையுடனான வானிலைக் காரணமாக மஹாவலி கங்கையின் நாவலப்பிட்டி பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மஹாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கெப்பிட்டல் எப்.எம் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா : பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி!

கெப்பிட்டல் எப்.எம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடும் நிலையில், அந்நிறுவனத்தின் பணிப்பாளர் விதுர்ஷன் வின்சேந்திர ராஜனின் வாழ்த்துச் செய்தி.. கெப்பிட்டல் எப்.எம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடுவதில் பெருமை...

மஹர சிறைச்சாலைக் கைதிகள் 12 பேருக்கு கொரோனா தொற்று!

மஹர சிறைச்சாலைக் கைதிகள் 12 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கைதிகளுள் இதுவரை 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலை...

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் நேற்றைய நாளில் பதிவு செய்யப்பட்ட கொரோனா தொற்றாளர்களுள் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளங் காணப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு  தேசிய செயலணி தெரிவித்துள்ளது. இதன்படி தொற்றுக்குள்ளான 147 பேர் நேற்றைய நாளில் அடையாளங் காணப்பட்டுள்ளனர். மேலும்...

வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் கடந்த இரண்டு மாதங்களின் பின்னர் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  பிரதிப்பொலிஸ்  மா அதிபர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இதேவேளை நேற்றைய நாளில் இடம்பெற்ற 6 வாகன...

மஹர சிறைச்சாலை தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட  மோதலில் சேதமடைந்துள்ள  பொருட் சேதங்கள் குறித்து இன்று மதிப்பீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் பாரிய பொருட் சேதம்  ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz