மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார நடைமுறைப்படி நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சை!

- Advertisement -

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி,  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 3  இலட்சத்து 31 ஆயிரத்து 694 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

- Advertisement -

நாடளாவிய ரீதியில்   2 ஆயிரத்து 936 பரீட்சை  மத்திய நிலையங்களில்  பரீட்சை நடைபெறுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெறும் பரீட்சை மத்திய நிலையங்களின் சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக  கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், சுகாதார பரிந்துரைகளுக்கமைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் உட்பட  கல்வி அமைச்சின்அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில்   8 ஆயிரத்து 410 மாணவர்கள் இந்த முறை தரம் 5 புலமைப் பரிசில் தோற்றியுள்ளனர்.

இதற்கமைய,  தீவகம் யாழ்ப்பாணம் தென்மராட்சி வலயத்தில் 3 ஆயிரத்து 540 மாணவர்களும் , வடமராட்சி – வலிகாமம் வலயத்தில் 4 ஆயிரத்து 870 மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், 94 பரீட்சை நிலையங்கள் மற்றும்   22 இணைப்பு நிலையங்களிலும் சுகாதார நடைமுறையை பின்பற்றி தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, மலையகத்திலும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை சுகாதார பாதுகாப்பு ந்டைமுறைகளுக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்துயாளர் தெரிவித்தார்.

இதற்கமைய, ஹட்டன் கல்வி வலயத்தில் 43 பரீட்சை மத்திய நிலையங்களில் 3 ஆயிரத்து 788 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு, நுவரெலியா கல்வி வலயத்தில் 36 பரீட்சை மத்திய நிலையங்களில்  4 ஆயிரத்து 150 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா வைரஸ்  அச்சநிலைமை காரணமாக  வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள்  277 பேர் நாடு திரும்பியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா சென்றிருந்த இலங்கையர்கள்  ஐந்து விசேட விமானங்களில் இன்று அதிகாலை இவ்வாறு நாடு...

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 31 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் – அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்குவதற்கு தடை

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடாக பட்ட கற்கைநெறிக்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சான்றிதழ்களை வழங்குவதற்கான...

யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

“கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டின் எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தின் யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம்  நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கமைய, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பளம் வெறுமனே வாக்குதியாக மட்டும் இருந்துவிடக்கூடாது – கயந்த கருணாதிலக்க வலியுறுத்தல்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்துள்ள அரசாங்கம் அதனை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர்...

Developed by: SEOGlitz