மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரிசி விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!

- Advertisement -

அம்பாறை மாவட்டத்தில் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நுகர்வோர் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி என்.எம். சப்றாஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதன்படி, 9 வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி குறித்த வர்த்தகர்கள் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முயற்சித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் ஆகிய பிரதேசங்களில் நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் குழுவினால் நேற்றைய தினம் சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகளுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, 9 வர்த்தகர்கள், கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முயற்சித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டரிசி, வெள்ளை மற்றும் சிவப்பு அரிசி 96 ரூபாவாகவும், சம்பா அரிசி மற்றும் சிவப்பு அரிசி 98 ரூபாவாகவும், பச்சை அரிசி வெள்ளை மற்றும் சிவப்பு அரிசி 93 ரூபாவாகவும், கீரிசம்பா அரிசி 120 ரூபாவாகவும், கட்டுப்பாட்டு விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இவரிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை – STR இன் புதிய புகைப்படங்கள்!

லிடில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிலம்பரசன் தன்னுடைய புதிய படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.

மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக...

மின்சாரத் துறையின் மாற்றங்கள் தொடர்பில் டலஸ் அழகப்பெரும கருத்து!

மின்சாரத் துறையில் முதலீடுகளை மேற்கொள்ள தாம் அழைப்பு விடுப்பதாக, மின்சக்தித் துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார். இலங்கை மின்சார சபையில் மாத்திரம் 65 லட்சம் பயனாளர்கள் இருக்கின்றனர். அத்துடன் Leco நிறுவனத்தில் மாத்திரம்...

Developed by: SEOGlitz