மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாட் கைது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் விளக்கம் கோரல்

- Advertisement -

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை இதுவரை கைது செய்ய முடியாமல் போயுள்ளமை குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

இதற்காக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில், தான் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன்  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தனது வழக்கறிஞர் மூலம் குறித்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில், தேர்தல் சட்டங்களை மீறி, வாக்காளர்களுக்கு போக்குவரத்து சேவைகளைப் பெற்றுக் கொடுத்தமை தொர்பில்  ரிஷாட் பதியுதீன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கைப் போக்குவரத்துசபைக்கு  சொந்தமான பேருந்துகளை பயன்படுத்தி, வாக்காளர்களுக்கு குறித்த போக்குவரத்து சேவைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளதாக ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ரிஷாட் பதியுதீனைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபரினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து. ரிஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் 6 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரிஷாட் பதியுதீன் பாவித்ததாகக் கருதப்படும் வாகனங்கள் இரண்டு கடந்த 13ஆம் திகதி வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த வாகனங்களில் இருந்து அனுமதிப் பத்திரம் அற்ற துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாளைமுதல் மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவைகள்! விபரம் உள்ளே..

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியன இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளன. இதன்படி, ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நகர எல்லைகள் வரை...

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடல்!

மோட்டார் வாகன திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் சுமித் சீ.கே. அலஹகோன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 85 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பேலியகொடை மீன்சந்தை மற்றும் மீன்பிடி துறைமுகங்களுடன் தொடர்புடைய 85 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான...

நாளை முதல் இரயில் சேவைகள் அனைத்தும் இரத்து!

நாளை முதல் விசேட இரயில் சேவைகள் தவிர்ந்த அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரதான மார்க்கம், புத்தளம் மற்றும் களணிவெலி ஆகிய மார்க்கங்களிலான அனைத்து அலுவலக மற்றும் பயணிகள் ரயில்...

இராணுவத் தளபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

பொதுமக்களின் பாதுகாப்பினை  கருத்திற்கொண்டே  தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாகவும்  எனவே பொதுமக்கள் அச்சமடையத் தேவையில் எனவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளர். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளர். இவ்விடயம் தொடர்பாக...

Developed by: SEOGlitz