மெய்ப்பொருள் காண்பது அறிவு

மூடப்பட்டிருந்த கொழும்பு மெனிங் சந்தையின் 70 வர்த்தக நிலையங்கள் இன்று மீண்டும் திறப்பு!

- Advertisement -

கொரோனா தொற்று அச்சநிலைமை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு மெனிங் சந்தையின் 70 வர்த்தக நிலையங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணொருவரின் கணவர் கொழும்பு மெனிங்க சந்தையில்  பணியாற்றி வந்த நிலையில்  மெனிங் சந்தையின் 70 வர்த்தக நிலையங்களுக்கு  தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

- Advertisement -

இதன் காரணமாக குறித்த வர்த்தக தொகுதி நேற்று தற்காலிகமாக  மூடப்பட்டது.

இதேவேளை குறித்த வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இன்று பி சி ஆர் பரிசோனைக்குட்படுத்தப்படவுள்ளதாக மெனிங் சந்தை பொது வர்த்தக சங்க தலைவர் லால் ஹெட்டிகே தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வரவு செலவு திட்ட விவாதத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலைமை காரணமாக வரவு செலவு திட்ட விவாதத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2020 ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவு திட்டம் நவம்பர் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. மேலும், 2020 நிதியாண்டிற்கான இரண்டு...

முற்றாக மூடப்பட்டிருந்த ஹட்டன் – டிக்கோயா நகரம் வழமைக்கு திரும்பியது!

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ருந்த ஹட்டன் - டிக்கோயா நகரின் ஒருபகுதி மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தொற்று நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் சில கடைகளை திறப்பதற்கு சுகாதார தரப்பினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்றாளர்...

உள்ளுர் உற்பத்திகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அவதானம்: தயாசிறி ஜயசேகர!

நாட்டின் தேசிய கொடி உள்ளிட்ட உள்ளுர் உற்பத்திகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உள்ளுர் தயாரிப்புக்களான கைவினைப் பொருட்கள் ஆடை உற்பத்தி துறையினை...

வத்தளையிலுள்ள ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் 49 பேருக்கு கொரோனா!

வத்தளை பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையில் சுமார் ஆயிரம் பேர் பணியாற்றுவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அவர்களுள் 122 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை...

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட அதிகாரிகள் 8 பேருக்கு கொரோனா தொற்று!

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட அதிகாரிகள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இதுவரையான காலப்பகுதியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் வத்தளை...

Developed by: SEOGlitz