மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

- Advertisement -

கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் நோயாளர் பராமரிப்பு சேவையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த வைத்தியசாலை நிர்வாக ஊழியர்களுக்கு பி சி ஆர் பரிசோதனை முன்னெடுக்கபட்டுள்ளதுடன், அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் தொற்றுக்குள்ளான குறித்த பெண் வசித்துவந்த பொரளை பகுதியில் எள்ள நபர்களுக்கு பி சி ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டிக்கோவிட்ட  பகுதியில்  கடற்றொழிலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த மீனவர் தொழில் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய படகொன்றில்  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக  தெரியவந்துள்ளது.

இதற்கமைய டிக்கோவிட்ட  துறைமுக பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கெப்பிட்டல் எப்.எம் அலைவரிசையின் மூன்றாம் ஆண்டு நிறைவு !

கெப்பிட்டல் எப்.எம் அலைவரிசையின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் இன்றையதினம் இடம்பெற்றிருந்தன. கொழும்பில் அமைந்துள்ள கெப்பிட்டல் எப்.எம் கலையகத்தில் இன்று முற்பகல் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், விசேட பூஜை வழிபாடுகளுடன் இந்த...

நாட்டைத் தாக்கவுள்ள ஆபத்து : வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவின் வடமேற்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள வளிமண்டல தாழமுக்கமானது திருகோணமலையில் இருந்து 500 கடல்மைல் தொலைவில் நிலைகொண்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களமானது இன்று விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த தாழமுக்கமானது அடுத்துவரும்...

கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் மூடல்!

கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் 2, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் மூடப்படவுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் : அங்கஜன் கோரிக்கை!

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான...

கெப்பிட்டல் எப்.எம் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா : நிறைவேற்று அதிகாரியின் வாழ்த்துச் செய்தி!

கெப்பிட்டல் எப்.எம் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினையொட்டி நிறுவனத்தினது பிரதம நிறைவேற்று அதிகாரி லீ சிங் மேயின் வாழ்த்துச் செய்தி.. "கெப்பிட்டல் எப்எம் இன் இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்த, ஆதரவாக இருக்கின்ற...

Developed by: SEOGlitz