மெய்ப்பொருள் காண்பது அறிவு

எண்ணைக் கப்பல் தொடர்பில் நாளை முக்கிய தீர்மானம்!

- Advertisement -

தீ விபத்துக்குள்ளான NEW DIAMOND கப்பல் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நாளைய தினம் கலந்துரையாடவுள்ளதாக சமுத்திரச் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தீயைக் கட்டுப்படுத்துவதற்காக ஈடுபட்ட அனைத்து தரப்பினருடனும் இணைந்து இந்தக் கலந்துரையாடலை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக சமுத்திரச் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் டேர்னி பிரதீப் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அத்துடன், குறித்த கப்பலில் ஏற்ப்பட்ட தீ விபத்துக் காரணமாக சூழலுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,  தீ விபத்தினால் இலங்கை கடற்பரப்புக்கு எச்சரிக்கைகள் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தீயனைப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கையினால் மேற்கொள்ளப்பட்ட செலவீனங்களை மீளப் பெற்றுக் கொள்வதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் சமுத்திரச் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் டேர்னி பிரதீப் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தீ விபத்துக்குள்ளான குறித்த கப்பல், தற்போது இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் இருந்து 45 கடல் மைல் தூரத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிக்கின்றது.

இதேவேளை, தீ விபத்துக்குள்ளான NEW DIAMOMD கப்பல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.

இதற்கமைவாக, கப்பலின் பிரதானி உள்ளிட்ட ஏனைய பணியாளர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக் கொள்வதற்காக,  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த குழுவினர் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நேற்றையதினம் காலிப் பிரதேசத்திற்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பரந்தன் – பூநகரி பிரதான வீதி பூட்டப்பட்டது!

கிளிநொச்சி, பரந்தன் - பூநகரி வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர்  சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார். இதன்படி பரந்தன் பூநகரி வீதியூடாக எதிர்வரும் மூன்றாம்...

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் ஒழுங்காகச் செயற்படவில்லை : அரவிந்தகுமார்!

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் முறையற்ற போக்கை கடைப்பிடித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார். பதுளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.   CAPITAL...

வீதியை புனரமைத்து தருமாறு கோரி மடுல்சீமை மக்கள் ஆர்ப்பாட்டம்!

மடுல்சீம - மாதோவ பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். மடுல்சீம - பசறை பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மருத்துவ தேவைகளுக்காக பயணிப்போர், பாடசாலை மாணவர்கள் என...

கொக்குப்படையான் கிராம மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளது எனவும், விரைந்து நடவடிக்கை...

கொரோன தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்!

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓமான் நாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

Developed by: SEOGlitz