மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவிசாவெல்ல – இரத்தினபுரி பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 3 பேர் உயிரிழப்பு – 18 பேர் காயம்!

- Advertisement -

இரத்தினபுரி – அவிசாவெல்ல பிரதான வீதியின் திவுரும்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை 3.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

லொரியொன்றும் – முச்சக்கரவண்டி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த  மூன்று பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

48, 53 மற்றும் 57 வயதுடைய மண்டாவல பகுதியை சேர்ந்த நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் லொரி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவிசாவெல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, கொழும்பு இரத்தினபுரி பிரதான விதியின் குருவிட்ட பகுதியில் இரண்டு தனியார் பஸ்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

பலாங்கொடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும், கேகாலையில் இருந்து இரத்தினபுரிக்கு அரச சேவையாளர்களை ஏற்றிவந்த பஸ் ஒன்றும் இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளன.

விபத்தில் காயமடைந்த 18 பேரும் இரத்தினபுரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் நான்கு பேர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்க்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இரு நாடுகளுக்கிடையிலான விமான சேவைக்கு தடை! காரணம் என்ன?

இந்தியா மற்றும் டுபாய் ஆகிய நாடுகளுக்கிடையிலான விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து டுபாய் சென்ற விமானங்களில் பயணித்த பயணிகளில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, டுபாய் இந்தத் தடை உத்தரவைப்...

நாட்டின் சில மாவட்டங்களில் 150 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும்- சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்திலும், வடமேல் மாகாணத்திலும் நிலவும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்க கூடுமென எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில்...

ரஷ்யாவில் கொரோனா தொற்று குறித்து தற்போதைய நிலவரம்!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 5 ஆயிரத்து 905 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்து 91 ஆயிரத்து 186 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மடகஸ்காரில் இருந்து வருகைத்தந்த ஒருவர் மற்றும் ஓமானில் இருந்து வருகை...

இஸ்ரேலுடன் நல்லுறவுகளை ஏற்படுத்துவதற்கு மேலும் ஐந்து நாடுகள் பரிசீலனை!

மத்திய கிழக்கில் இஸ்ரேலுடன் நல்லுறவுகளை ஏற்படுத்துவதற்கு மேலும் ஐந்து நாடுகள் பரிசீலித்துவருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி Mark Meadows  வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே Wisconsin...

Developed by: SEOGlitz