மெய்ப்பொருள் காண்பது அறிவு

முல்லைத்தீவில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் – விபரம் உள்ளே!

- Advertisement -

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த தனியார் காணியொன்றிலிருந்து ஒருதொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

- Advertisement -

அத்துடன், குறித்த வெடிபொருட்கள் இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் மறைத்துவைக்கப்பட்ட வெடிபொருட்களாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுவதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கிழக்கு பிராந்திய கடற்படையினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின்போது, 3 பிளாஸ்டிக் பைகளில் வைக்கப்பட்டிருந்த TNT ரக வெடிபொருள் 45 கிலோ, C 4 ரக வெடிபொருள் 5 கிலோ, 81 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் 7, அடையாளம் காணப்படாத 15 fuseகள், 118 expelling charger கள், கிளைமோர் குண்டு ஒன்று, அடையாளம் காணப்படாத 8 கிலோ அளவுள்ள குண்டு மற்றும் மின்சார டெட்டனேட்டர் ஒன்று ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குறித்த வெடிபொருட்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக கடற்படையினரால் முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பிரதேசத்தில் மேலும் வெடிபொருட்கள் காணப்படுகின்றனவா என்பது குறித்த சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்  - விபரம் உள்ளே! 1 முல்லைத்தீவில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்  - விபரம் உள்ளே! 2

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மடகஸ்காரில் இருந்து வருகைத்தந்த ஒருவர் மற்றும் ஓமானில் இருந்து வருகை...

இஸ்ரேலுடன் நல்லுறவுகளை ஏற்படுத்துவதற்கு மேலும் ஐந்து நாடுகள் பரிசீலனை!

மத்திய கிழக்கில் இஸ்ரேலுடன் நல்லுறவுகளை ஏற்படுத்துவதற்கு மேலும் ஐந்து நாடுகள் பரிசீலித்துவருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி Mark Meadows  வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே Wisconsin...

கடற்றொழிலாளர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதற்கமைய, மட்டக்களப்பு முதல் திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் புத்தளம் ஊடாக, கொழும்பு வரையில் காற்றின் வேகம் அதிகரித்து...

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு ஏற்பட்ட வருமான இழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு 14 பில்லியன் அமெரிக்க டொலர் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக fifa தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 6 மாதங்களின் பின்னர்...

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை : கமல் குணரட்ன!

அரச நிறுவனங்களில் மோசடியில் ஈடுபட்ட  அனைத்து தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்...

Developed by: SEOGlitz