மெய்ப்பொருள் காண்பது அறிவு

யானைகளினால் பாதிக்கப்படும் பொதுமக்கள் -தீர்வு எப்போது?

- Advertisement -

யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல் நாடு முழுவதும் காட்டின் எல்லைப்பகுதிகளை அண்மித்து அமைந்துள்ள கிராமங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில்  ஜனாதிபதி நேரடி கவனம் செலுத்தியிருப்பதாவது இந்தப் பிரச்சினையின் தீவிரத்தைக்  காட்டுகின்றது.

- Advertisement -

இந்த நிலையில்,  நாடு முழுவதும் 2019 ஆம் ஆண்டு காட்டு யானைகளினால் 122 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன்,  407 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோன்று இந்த வருடத்தின் கடந்த எட்டு மாதங்களில் 62 பேர் உயிரிழந்துள்ளதுடன், 200 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பத்தினிபுரம் கிராமத்தில் யானைகளின் தொல்லை அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக, குறித்த பகுதியில் பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும், இரவு வேளைகளில் குடியிருப்புகளுக்குள் நுழையும் யானைகளினால் இந்தப் பகுதி மக்கள் உயிராபத்தை எதிர்கொண்டுள்ளதுடன், நிம்மதியாக உறங்கவும் முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பலமுறை அதிகாரிகளிடம் முறைப்பாடுகளை முன்வைத்துள்ள போதிலும் எந்தவிதமான தீர்வுகளும் இதுவரை எட்டப்படவில்லை எனவும் இந்த மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இவ்வாறு, தொடர்ந்து யானைகளுடன் போராடிக்கொண்டிருக்கும் பத்தினிபுரம் கிராம மக்கள், உரிய அதிகாரிகள் விரைவில் தீர்வுகளை முன்வைத்து தம்மை உயிராபத்தில் இருந்து பாதுகாக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தொழில் பெற்றுத்தருவதாக மோசடி – நீதி அமைச்சர் விடுத்துள்ள அதிரடி பணிப்புரை..!

தொழில்வாய்ப்பினை பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்களை கைது செய்யுமாறு நீதி  அமைச்சர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். நீதி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம்...

புதிய தூதுவர்கள் ஜனாதிபதியினால் நியமனம்..!

நான்கு நாடுகளுக்கான புதிய தூதுவர்கள்  இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று முற்பகல் புதிய தூதுவர்கள் தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர். கொரியக்...

புதிய வரவுசெலவு திட்டம் – அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியானது..!

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட கப்ரால் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்வரும் நவம்பர்...

கல்விசார் சமூகத்திற்கு அங்கஜன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை..!

நாட்டில் எதிர்காலத்தில் கல்விசார் புதிய தலைமுறை ஒன்றை உருவாக்குவதற்கு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ்மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டார். கொழும்பு இந்து கல்லூரியில் இன்று...

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் அடையாளம்  காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராஜியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில்...

Developed by: SEOGlitz