மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிராம மட்டத்தில் 100,000 கிலோமீற்றர் பாதை புனரமைப்பு – 2024க்குள் நிறைவு என்கிறார் ஜனாதிபதி

- Advertisement -

கிராம மட்டத்தில் ஒரு இலட்சம் கிலோமீற்றர் பாதையை புனரமைப்பு செய்யும் நடவடிக்கைகளை 2024 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக குறித்த கிராமிய வீதிகளை  பிரதான வீதிகளுடன் இணைக்கும் திட்டத்தை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

- Advertisement -

கிராமிய வீதி மற்றும் அடிப்படைவசதிகள் இராஜாங்க அமைச்சுக்கான வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயும் கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

விரைவாகவும், பாதுகாப்பாகவும் சொகுசாகவும் போக்குவரத்தில் ஈடுபடும் உரிமை நாட்டு பிரஜைகளுக்கு உள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, சுபீட்சமான எதிர்காலம் என்னும் ஜனாதிபதியின் கொள்கைத் திட்டத்தின் ஊடாக இந்த மக்கள் தேவையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், புதிய பாலங்கள், சிறிய மற்றும் இரும்பு பாலங்கள் என்பன இதன்போது அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இதேவேளை, கடந்த சில மாதங்களில் 8 ஆயிரம் கிலோமீற்றர் நீளமான வீதிகளுக்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதில் 400 கிலோமீற்றர் வீதி முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த வீதி நிர்மாண பணிகளுக்கான கல், மண், மணல் ஆகியவற்றை முழுமையாக பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு மாவட்ட செயலாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த திட்டங்களை முன்னெடுக்கும் போது ஏற்படும் காலதாமதம் மற்றும் போக்குவத்து பாதிப்புகளை தவிர்க்குமாறும் ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பரந்தன் – பூநகரி பிரதான வீதி பூட்டப்பட்டது!

கிளிநொச்சி, பரந்தன் - பூநகரி வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர்  சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார். இதன்படி பரந்தன் பூநகரி வீதியூடாக எதிர்வரும் மூன்றாம்...

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் ஒழுங்காகச் செயற்படவில்லை : அரவிந்தகுமார்!

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் முறையற்ற போக்கை கடைப்பிடித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார். பதுளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.   CAPITAL...

வீதியை புனரமைத்து தருமாறு கோரி மடுல்சீமை மக்கள் ஆர்ப்பாட்டம்!

மடுல்சீம - மாதோவ பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். மடுல்சீம - பசறை பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மருத்துவ தேவைகளுக்காக பயணிப்போர், பாடசாலை மாணவர்கள் என...

கொக்குப்படையான் கிராம மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளது எனவும், விரைந்து நடவடிக்கை...

கொரோன தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்!

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓமான் நாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

Developed by: SEOGlitz