மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகின் பிரதான கப்பல் கேந்திர நிலையமாக : இலங்கை!

- Advertisement -

இலங்கையை உலகின் பிரதான கப்பல் கேந்திரநிலையமாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போதே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், உலகின் அபிவிருத்தியடைந்த துறைமுகத்தை முன்மாதிரியாகக் கொண்டு, நாட்டின் துறைமுக வசதிகளை அபிவிருத்தி செய்ய தேவையான இலக்குகளை உருவாக்கி, அதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், 24 ஆயிரம் கொள்கலன்களைக் கையாளும் திறன்கொண்ட துறைமுகமாக நாட்டின் துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டை அண்மித்து பயணிக்கும் சர்வதேச கப்பல்களுக்கு தேவையான சேவைகளை வழங்கும் வகையில், கொழும்பு, காலி, திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் ஒலுவில் ஆகிய துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இந்த சந்திப்பின்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டின் தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு கொண்டுவர முடியும்: மனோகணேஷன் கருத்து!

சிங்கள மக்களின் அதிக விருப்புக்களை கொண்ட ஒருவருக்கே இந்த நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு கொண்டுவர முடியும்  என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேஷன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற...

எண்ணெய்க் குதங்களை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள்!

திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய்க் குதங்களை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது இந்திய அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைத்த அமைச்சர் உதய கம்மன்பில இதனைக்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு!

சில தரப்பினரின் தேவைகளுக்கு இணங்கவே ஸஹ்ரான் ஹாசிம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவிக்கின்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையானதன்...

சஜித்தின் இணைப்புச் செயலாளராக சமித் விஜேசுந்தர நியமனம்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இணைப்புச் செயலாளராகவும், சிறப்புப் பிரதிநிதியாகவும் சமித் விஜேசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அதற்கான நியமனக் கடிதம் சஜித் பிரேமதாசவினால் வழங்கிவைக்கப்பட்டது. கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்வைத்து இந்த நியமனம் வழங்கிவைக்கப்பட்டமை...

நாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம்!

நாட்டில் கொரோனா தொற்றுகுள்ளான மேலும் 10 பேர் அடையாளம்  காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமானிலிருந்து வருகைத்தந்த 7 பேருக்கும், கட்டார், ஐக்கிய அரபு...

Developed by: SEOGlitz