மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமைச்சர் மஹிந்தானந்த வடக்கிற்கு கண்காணிப்பு விஜயம்!

- Advertisement -

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே நாளை(15) வடக்கிற்கான  கண்காணிப்பு  விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

வட மாகாண விவசாயிகள் முகங்கொடுக்கும்  பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகவே அவர் இவ்வாறு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

- Advertisement -

இதற்கமைய, அச்சுவேலி , யாழ்ப்பாண- மாவட்ட செயலகம், விடத்தற்பளை, கிளிநொச்சி, திருவையாறு மற்றும் இரணைமடு  ஆகிய பிரதேசங்களுக்குச் சென்று குறித்த பிரச்சினை தொடர்பில்  ஆராயவுள்ளார்.

மேலும், கால்நடை வளர்ப்பு, வாழை மற்றும் கிழங்கு பயிர்ச்செய்கை  தொடர்பில் ஆராய்வதற்காக நீர்வெலி மற்றும் அச்சுவேலி ஆகிய பிரதேசங்களுக்கு நாளை மறுதினம்  விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

15.09.2020
நேரம் இடம் காரணம்
முற்பகல் 09.30 அச்சுவேலி திராட்சை செய்கையாளர்கள் சந்திப்பு
முற்பகல் 10.00 யாழ்ப்பாணம் – மாவட்ட செயலகம் விவசாயிகள் சந்திப்பு
பிற்பகல் 02.00 விடத்தற்பளை ASMP மாங்காய் மற்றும் மிளகாய் உற்பத்திகளைப்  பார்வையிடல்
பிற்பகல் 03.00 கிளிநொச்சி யாழ் பல்கலைக்கழக விஜயம்
பிற்பகல் 04.00 இரணைமடு பிரதேச விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலைய விஜயம் (RARDC)
பிற்பகல் 05.00 திருவையாறு ஜம்போ நிலக்கடலை  உற்பத்தி கண்காணிப்பு விஜயம்
16.09.2020
நேரம் இடம் காரணம்
முற்பகல் 08.00 நீர்வெலி வாழை மற்றும் கிழங்கு பயிர்ச்செய்கை கண்காணிப்பு விஜயம்
முற்பகல் 09.00 அச்சுவேலி கால்நடை வளர்ப்பு கண்காணிப்பு விஜயம்

அமைச்சர் மஹிந்தானந்த வடக்கிற்கு கண்காணிப்பு விஜயம்! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம் – ஒருவர் உயிரிழப்பு

கண்டியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி – பூவெலிகட பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று இன்று காலை இடிந்து வீழ்ந்துள்ளது. இந்தக் கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சுமார் ஒன்றரை...

புத்தளத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கண்காணிப்பு விஜம்

புத்தளம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்றைய தினம் கண்காணிப்பு விஜமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்படி, மதுரங்குளி மற்றும் வாழைச்சேனை தோட்டங்களின் செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்து...

கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து குழந்தை மீட்பு

கண்டியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து சுமார் ஒன்றரை மாதக் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம்

கண்டி - பூவெலிகட பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்துள்ளது. குறித்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மூவரை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

“தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் கைது

ஆவா குழுவில் இருந்து வெளியேறிய “தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் யாழ்ப்பாணம் மாணிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்  மேற்கொள்ளப்பட்ட  திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்  போதே...

Developed by: SEOGlitz