மெய்ப்பொருள் காண்பது அறிவு

பால் தேவையை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்…

- Advertisement -

நாட்டின் திரவ பால் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு  உள்ளூர் விவசாயிகளின் பங்களிப்புடன் அரச மற்றும் தனியார்  ஆகிய இருதுறைகளிலும்  திட்டங்களை வகுக்குமாறு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், பால் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சேவைகளை மேம்படுத்தி இலக்குகளை விரைவாக அடைவதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

- Advertisement -

கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி  ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் பால் தேவையில் வருடத்திற்கு 40 வீதத்திற்கும் குறைவாகவே உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சத்தான பாலை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை மக்கள் இழந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் ஏற்ற வகையில் பால் வகைகளை உற்பத்தி செய்வது குறித்து ஆய்வுகளை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கம் தீர்மனித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் 15 தோட்ட நிர்வாகங்களுடன் இணைந்து 15 ஆயிரம் கறவை மாடுகளை வளர்ப்பதற்கும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இதன்போது தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் அதிகரிக்கும் அச்சநிலை – 873 பேருக்கு கொரோனா – உயிரிழப்பும் அதிகரிப்பு…!

நாட்டில் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றையதினம் 873 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்ட நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது, பேலிய கொடை கொரோனா கொத்தணியுடன தொடர்புடைய 866 பேரும்,...

நுவரெலியா மாவட்டத்தில் 16 பாடசாலைகளுக்கு தேசிய பாடசாலை அந்தஸ்து!

நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள 16 தமிழ்ப் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விடயத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர்...

இந்தியாவிலிருந்து தடுப்பூசி கொள்வனவு செய்வதற்கான ஆவணங்கள் சட்டமா அதிபரிடம்!

இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசியைக் கொள்வனவு செய்வதற்கு தேவையான ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். குறித்த கொள்வனவு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான சட்ட ரீதியான அனுமதியைப்...

தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா – அதிகரிக்கும் தொற்றாளர்கள்..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 337 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது. பேலியக்கொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 330 பேரும், கைதிகள் 7 பேரும் இவ்வாறு தொற்றுடன்...

மலேசியாவில் நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு எதிர்க்கட்சியினால் கோரிக்கை

மலேசியாவில் நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு அந்தநாட்டு எதிர்க்கட்சித் தலைவர் தத்துக் அன்வர் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார். நம்பிக்கை கூட்டணி மற்றும் ஆளும் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு கடிதம்...

Developed by: SEOGlitz