மெய்ப்பொருள் காண்பது அறிவு

துஷ்பிரயோக குற்றச்சாட்டில் வைத்தியருக்கு சிறைத் தண்டனை!

- Advertisement -

பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், ஆயுர்வேத வைத்தியர் ஒருவருக்கு 15 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

கந்தளாய் – பேராறு பகுதியைச் சேர்ந்த 53 வயதையுடைய ஆயுர்வேத வைத்தியர் ஒருவருக்கே இவ்வாறு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டிருந்த குறித்த நபரை கைது செய்யுமாறு கடந்த பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி,  உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார்.

இதனையடுத்து, சந்தேகநபரை  உடனடியாக கைது செய்யுமாறு பிடியாணை  பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, சந்தேகநபர் கொகரல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிஹினிவெஹர பகுதியில் வைத்து, கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, சந்தேகநபர் இன்றைய தினம் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, 15 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும்  அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும்  ஐந்து வருட காலம், கடூழிய சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

2012 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆறாம் திகதி,  மயக்க மருந்து கொடுத்து பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்ததாக, பிரதிவாதி மீது குற்றஞ்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பூக்கள் உற்பத்தி அதிகரிப்பு குறித்து சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்ட தகவல்!

நாட்டில் பூக்கள் உற்பத்தியை அதிகரிக்க 23 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பூச் செடிகள் மற்றும் ஏனைய பொருட்களை பூக்களை உற்பத்தி செய்வோருக்கு இலவசமாகப் பெற்றுக் கொடுக்க இந்த தொகை பயன்படுத்தப்படும்...

நாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 360 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வருகை தந்த...

CSK அணி குறித்து வெளியான தகவல்!

சுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பமாட்டார் என, அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார. தற்போது நடைபெற்றுவரும் IPL தொடரில் பங்கேற்பதற்காக சுரேஷ் ரெய்னா ஐக்கிய...

20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையுமில்லை: ம.வி.மு கருத்து!

20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த முன்னாள் நாடாளுமன்ற சுனில் ஹந்துனெத்தி இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS ·...

தேசிய பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!

தேசிய பால் உற்பத்தியை 70 வீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த பால் தேவையில் 40 வீதம் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களின் மூலமும், மிகுதி 60 வீதம் இறக்குமதி செய்யப்படும்...

Developed by: SEOGlitz