மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறையை நீக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்!

- Advertisement -

சிறைச்சாலைகளில் நிலவும் இடப்பற்றாக்குறையை நீக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய தெரிவிக்கின்றார்.

சிறைச்சாலைத் தலைமைகயத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

கடந்த இரண்டு மாத காலத்துக்குள் சிறைச்சாலைகளில் சுமார் 7000 பேர் வரையில் அதிகரித்துள்ளார்கள். இந்த நிலையில் இடவசதிகள் குறித்து நாம் விசேட கவனஞ் செலுத்தியுள்ளோம். சிறைச்சாலைகளில் 11 ஆயிரத்து 762 பேருக்கு மாத்திரமே இடவசதி உண்டு.ஆனால் தற்போது 30 ஆயிரத்து 92 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.இந்த நிலையில் போகம்பரை பழைய சிறைச்சாலைக்கு நாம் அண்மையில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தோம். அங்கு மேலும் தடுத்துவைப்பதற்கான வசதிகள் உள்ளதா என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்தோம். எனினும் அந்த சிறைச்சாலை தற்போது தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு புனர் நிர்மாணங்களை செய்ய எதிர்பார்க்கின்றோம். குறிப்பாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள அதிக நெருக்கடிகளை குறைக்க நாம் எதிர்பார்க்கின்றோம்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

20 ஆவது திருத்தம் எதிர்காலத்தில் பாதிப்பாக அமையும்: விஜயபால குற்றச்சாட்டு!

20 ஆவது திருத்தம், அரசாங்கத்திங்கு எதிர்காலத்தில் பாதிப்பாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவிக்கின்றார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் அத்துடன்,...

IPL தொடரின் 11 ஆவது போட்டியில் Sunrisers Hyderabad அணிக்கு வெற்றி!

13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 11 ஆவது போட்டியில் Sunrisers Hyderabad அணி, 15 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று இரவு இடம்பெற்றிருந்தது. இதன்படி,...

குவைத்தில் புதிய மன்னர் நியமனம்: அமைச்சரவை தீர்மானம்!

குவைத்தின் 16ஆவது புதிய மன்னராக, முடிக்குரிய இளவரசர் Sheikh Nawaf al-Ahmed பெயரிடப்பட்டுள்ளார். குவைத்தின் மன்னராகப் பதவி வகித்த Sheikh Sabah al-Ahmed al-Sabah, தனது 91 ஆவது வயதில் நேற்றைய தினம் உயிரிழந்ததை...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது இதற்கமைய, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும்...

கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பப் படிவங்களில் காணப்படும் தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. குறித்த விண்ணப்பங்களை மீள்பரிசீலனை செய்தல் மற்றும் அவற்றில் உள்ள தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு 05...

Developed by: SEOGlitz