மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 2 மணித்தியாளங்களுக்குள் 699 பேர் கைது! காரணம் இதுவா?

- Advertisement -

நீர்கொழும்பு – கொச்சிக்கடை  பகுதியில் அமைந்துள்ள விழா மண்டபமொன்றில்  இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றில் சட்டவிரோத போதைப் பொருள் பாவனையில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

நீர்கொழும்பு – கொச்சிக்கடை, கம்மல்தொட பகுதியில் பொலிஸாரினால்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் குறித்த 30 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடன் இருந்து கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொச்சிக்கடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் நேற்றிரவு  முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருள் மற்றும் சட்ட விரோத மதுபானம் போன்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய  699 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 7 மணிமுதல் 9 மணி வரையிலான இரண்டு மணிநேர  காலப்பகுதிக்குள் குறித்த கைது நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

போதைப் பொருள் பாவனையாளர்களை மையப்படுத்தி மேல் மாகாணத்தின் பஸ் தரிப்பிடங்கள், இரயில் நிலையங்கள்  மற்றும்  மறைவான இடங்களிலேயே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 261 பேர் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டிலும், 184 பேர் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டிலும், 166 பேர் சட்டவிரோத மதுபானத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டிலும்,  32 பேர் ஐஸ் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் 6 ஆயிரத்து 568 பேரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த சோதனை நடவடிக்கையின் போது கட்டிட நிர்மாணப் பணியாளர்களுக்கு போதைப்பொருள் வழங்கிய குற்றச்சாரில்  48  பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இவ்வாறு போதைப்பொருட்களை வழங்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை,  போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு –  மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த  மூன்று பெண்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும். கைது செய்யப்பட்ட பெண்களிடமிருந்து சுமார், ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 90 கிராம் ஹெரோயின் போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், 4 கிலோகிராம் மாவா போதைப்பொருள் மற்றும் 29 கஞ்சா பொதிகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஹேமசிறி பெர்ணான்டோவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது : முன்னாள் ஜனாதிபதி மறுப்பு!

உயிர்த்த  ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னேடுத்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்த கருத்தினை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி...

ஹரீன் பெர்ணான்டோவினது கருத்து உண்மைக்குப் புறம்பானது : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மறுப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ முன்வைத்த கருத்தினை  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மறுத்துள்ளார். அத்துடன், இந்த கருத்திற்கு...

மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு விசேட சலுகைகள்!

நாட்டில் புதிதாக முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கும் போது மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன், மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு  விசேட சலுகை வழங்குவதற்கு...

பொதுஜன பெரமுனவில் இருந்து முக்கிய நபர் நீக்கம்!

பதுளை மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து ஆதர் சில்வா நீக்கப்பட்டுள்ளார். ஒழுக்காற்று நடவடிக்கையின் அடிப்படையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பதுளை மாநகர சபையின் தலைவர் பிரியந்த...

Developed by: SEOGlitz