மெய்ப்பொருள் காண்பது அறிவு

வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பிலான புதிய சட்டத்திருத்தம் விரைவில்..

- Advertisement -

வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பிலான புதிய சட்டத்திருத்தம் விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சீ.பி. ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் மற்றும் வனப்பகுதிகளுக்கு சேதத்தை விளைவித்தல் ஆகிய குற்றங்களுக்கான தண்டனைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

- Advertisement -

இதற்கான திருத்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுவருவதாகவும், வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சீ.பி. ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ஆனைவிழுந்தான் சரணாலயத்துக்கு சேதம் விளைவித்த நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும், அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஆர்மீனியா – அசர்பைஜான் படைகளுக்கிடைல் மோதல் – 31 பேர் உயிரிழப்பு!

Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கிடையில் தொடர்ந்தும் கடுமையான மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இரண்டு  தரப்புகளில் இருந்தும் 31 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், பொது மக்கள் 26 பேர்...

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயரின் நியமனம்: பேராயர் ஜஸ்ட்டின்!

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயராக வணக்கத்திற்குரிய துஷந்த ரொட்ரிகோவை நியமிப்பதாக Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி தெரிவித்துள்ளார். Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மறைமாவட்ட சபையின் கோரிக்கைக்கமைய, யாப்பின்...

தேசிய கொடி – பௌத்த கொடிகள் இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!

அடுத்த வருடம் முதல் பாடசாலை சீருடை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் பெருமளவான வீதத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இதற்கமைய, பெரிய மற்றும்...

பெருமளவிலான கழிவுத் தேயிலை கைப்பற்றல்!

எல்பிட்டிய பிரதேசத்தில் 5 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. ரத்கம பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்த கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. காலி - எல்பிட்டிய இணிகொடவல பிரதேசத்தில்...

தற்போதைய அரசாங்கம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் கருத்து!

மக்களை கேலிக்கு உட்படுத்தும் அரசாங்கமொன்றே தற்போது உருவாகியுள்ளதாக புத்தளம் மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவிக்கின்றார். எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். CAPITAL...

Developed by: SEOGlitz