மெய்ப்பொருள் காண்பது அறிவு

அம்பாறையில் பட்டதாரி பயிலுனர்களுக்கான பயிற்சிகள் நாளை ஆரம்பம்!

- Advertisement -

அம்பாறை மாவட்டத்தில் நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான பயிற்சிகள் நாளைய தினம் (14) ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஏ.அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பொதுத் துறை, முகாமைத்துவத் துறை, தனியார் துறை மற்றும் திட்ட வேலைகள் துறை ஆகிய துறைகளில் சகல பட்டதாரி பயிலுனர்களுக்கும் மூன்று வார கால பயிற்சிகள் 04 குழுக்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில்  பயிற்சிகள் வழங்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

முதலாவதாக தெரிவு செய்யப்பட்ட பெண் பட்டதாரி பயிலுனர்களுக்கு அம்பாறை கொண்டவட்டுவான் இராணுவ பயிற்சிப் பாடசாலையிலும், ஆண் பட்டதாரி பயிலுனர்களுக்கு மின்னேரியா இராணுவ பயிற்சிப் பாடசாலையிலும் தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும் இடங்கள், பயிற்சிக்கான கால அட்டவணை, பௌதீக மற்றும் ஆளணி வளங்கள் தொடர்பாக குறித்த பயிற்சிகளுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரிகளால் விளக்கமளிக்கப்படவுள்ளதாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஏ.அப்துல் லத்தீப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை மேம்படுத்த துமிந்த திஸாநாயக்க நடவடிக்கை!

நிலையானதும் புதுப்பிக்கத்தக்கதுமான எரிசக்தி உற்பத்திக்கான இலக்குகளை அடைய தேவையான கொள்கைகளை வகுப்பதே தமது முதன்மை இலக்காகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த...

20 ஆவது திருத்தம் குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு தாம் தலைவணங்குவதாக அமைச்சர் கருத்து!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு தாம் தலைவணங்குவதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். CAPITAL NEWS · 704577 20 ஆவது...

எழுத்து – வாய்மொழிப் பரீட்சைகளுக்கு பதிலாக மாற்று முறையை பின்பற்ற உள்ளூராட்சி அமைச்சு தீர்மானம்!

அரச கரும மொழிகளில் தேர்ச்சி பெறுவதற்காக எழுத்து மற்றும் வாய்மொழிப் பரீட்சைகளுக்கு பதிலாக மாற்று முறையை பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக குறிப்பிட்ட மணித்தியால அளவிலான பாடத்திட்டத்தை பூர்த்தி செய்யும் வாய்ப்பை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரச சேவைகள்,...

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 339 பேர் இன்று நாட்டுக்கு வருகை!

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 339 பேர் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 3 விசேட விமானங்களின் ஊடாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக, எமது விமான நிலைய...

தபால் சேவையை பொருளாதாரத்தின் பிரதான பங்காக மாற்றலாம்: ஜனாதிபதி வலியுறுத்தல்!

இலங்கை தபால் சேவையை தேசிய பொருளாதாரத்தின் பிரதான பங்காக மாற்ற முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதன்படி, சர்வதேச தபால் சேவை தொடர்பில் கவனஞ் செலுத்தி, பரந்த அளவிலான சேவை வாய்ப்புகளை...

Developed by: SEOGlitz