மெய்ப்பொருள் காண்பது அறிவு

மஞ்சள் கட்டிகளை கடத்த முற்பட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது!

- Advertisement -

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சித்த ஆயிரம் கிலோ கிராம் மஞ்சள் கட்டிகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, அவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

- Advertisement -

இந்தியாவின் வேதாளை கடற்கரையில் இருந்து,  இலங்கைக்கு மிளகு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படவுள்ளதாக கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமையவே, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, 34 மூடைகளில்  மறைத்துவைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரம் கிலோகிராம் மஞ்சள் கட்டிகள் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் வேதாளைப் பகுதியைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, இந்திய கடலோர பாதுகாப்புப் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஆசிரியர்களின் பெயர் விபரங்கள் பொலிஸாரினால் சேகரிப்பு!

வடக்கு - கிழக்கின் சில பகுதிகளில் நேற்றையதினம் ஹர்த்தால் இடம்பெற்ற நிலையில் வவுனியாவில் பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களின் பெயர் விபரங்கள் பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளன. இதற்கமைய, பொலிசார் பாடசாலை அதிபர்களை தொடர்பு கொண்டு, பாடசாலைக்கு சமூகமளித்த...

ஆர்மீனியா – அசர்பைஜான் படைகளுக்கிடைல் மோதல் – 31 பேர் உயிரிழப்பு!

Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கிடையில் தொடர்ந்தும் கடுமையான மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இரண்டு  தரப்புகளில் இருந்தும் 31 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், பொது மக்கள் 26 பேர்...

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயரின் நியமனம்: பேராயர் ஜஸ்ட்டின்!

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயராக வணக்கத்திற்குரிய துஷந்த ரொட்ரிகோவை நியமிப்பதாக Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி தெரிவித்துள்ளார். Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மறைமாவட்ட சபையின் கோரிக்கைக்கமைய, யாப்பின்...

தேசிய கொடி – பௌத்த கொடிகள் இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!

அடுத்த வருடம் முதல் பாடசாலை சீருடை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் பெருமளவான வீதத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இதற்கமைய, பெரிய மற்றும்...

Developed by: SEOGlitz