பூஸ்ஸ சிறைச்சாலையில் 40 க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுவருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவிக்கின்றார்.
இன்று காலை முதல் இவர்கள் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுவருவதாக துஷார உபுல்தெனிய கெப்பிட்டல் நியூசுக்கு தெரிவித்தார்.
சிறைச்சாலைக்குள் தேடுதல்களை முன்னெடுத்தல்,தமக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளும் சலுகைகளை துண்டித்தல், சிற்றுண்டிச்சாலையி
அத்துடன் தமது சட்டத்தரணிகளை சந்திக்கும் காலப்பகுதியை 30 நிமிடமாக அதிகரிக்குமாறும் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை அண்மைக்காலமாக நாட்டிலுள்ள சிறைச்சாலைகளுள் விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.