மெய்ப்பொருள் காண்பது அறிவு

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் மக்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கை!

- Advertisement -

நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை  மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இடைக்கிடையே மழை பெய்யுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பகுதிகளின் சில இடங்களில் 100 மில்லி மிற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.

- Advertisement -

மேலும், வடமத்திய மாகாணத்தின் பல இடங்களில் கன மழைப்பெய்யும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று மாலை வேளையில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் தொடர்ந்தும் பெய்துவரும் கன மழைக்காரணமாக, களுகங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,  அத்தனகலு ஓயாவினை அண்மித்த தூனாமலை பகுதிக்கும், களுகங்கையை அண்மித்த மில்லக்கந்த ஆகிய பகுதிகளுக்கு அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பகுதிகளில் ஆறுகளை அண்டிவாழும் மக்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பெய்து வரும் கனமழைக்காரணமாக பல பகுதிகளில் போக்குவர்த்துக்கு  பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு – கண்டி வீதியின் கலகடிஹேன உள்ளிட்டபகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.

நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று அதிகாலை கொள்கலன் ஒன்று குறித்த பகுதியில் விபத்துக்கு உள்ளானதில் வாகனநெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாகன நெரிசலைக் கட்படுத்தும் நோக்கில் தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக நிட்டம்புவை பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி அனுர குணவர்தன எமது கெப்பிடல் நியூசுக்கு குறிப்பிட்டார்.

இதேவேளை, கொழும்பு – சிலாபம் வீதியின் மாதம்மை பகுதியிலும் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.

மரமொன்று முறிந்து விழுந்துள்ள காரணத்தினாலேயே, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், கரையோர ரயில் மார்க்கத்தின் ரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகாமையில், மரமொன்று முறிந்து விழுந்துள்ள காரணத்தினால், குறித்த ரயில் மார்க்கத்திலான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, வாகன சாரதிகள் மற்றும் போக்குவரத்தில் ஈடுபடும் பொதுமக்கள் பாதுகாப்பாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று ஆரம்பம்

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். அத்துடன், இன்றைய தினத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பஸ்சேவை முன்னெடுக்கப்படுமெனவும், நாளை முதல்...

ஜப்பானில் இருந்து 7 லட்சத்துக்கும் மேற்பட்ட அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது இதன்படி, 7 லட்சத்து 28 ஆயிரத்து 460 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள்...

வாகன விபத்தில் பிரபல நடிகை காலமானார்

லிந்துலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிரபல நடிகை காலமானார் சிரேஷ்ட நடிகை ஹயசிந்த் விஜேரட்ன தனது 75 ஆவது வயதில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த நடிகை பயணித்த கார் நுவரெலியா தலவாக்கலை...

Developed by: SEOGlitz