மெய்ப்பொருள் காண்பது அறிவு

விபத்துக்குள்ளான New Diamond கப்பலுக்குள் நுழைந்த மூவர் – காரணம் இதுவா?

- Advertisement -

தீ விபத்துக்கு உள்ளான MT New Diamond எண்ணெய்க் கப்பலின் மீட்பு நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் மூவர் கப்பலுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், தீ விபத்துக்கு உள்ளான MT New Diamond எண்ணெய்க் கப்பல் காணப்படும் இடத்தில் எண்ணெய்ப் படிவுகளை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.

இரண்டு கடல்மைல் தொலைவுக்கு குறித்த எண்ணெய்ப் படிவுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கப்பலைச் சுற்றியுள்ள கடற்பிரதேசத்தில் நேற்றைய தினம் டீசல் படிவுகளை அவதானிக்க முடிந்ததாகவும், கடல் பிரதேசத்துக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில், இரசாயனங்களை தூவ நடவடிக்கை எடுத்ததாகவும், கடற்படை குறிப்பிட்டுள்ளது.

எனினும், குறித்த எண்ணெய்ப் படிவுகள் MT New Diamond எண்ணெய்க் கப்பலில் சேமிக்கப்பட்டுள்ள எண்ணெய் அல்ல எனவும், கப்பல் பயணத்துக்கு பயன்படுத்தப்பட்ட டீசல் எண்ணெய்யாக இருக்கலாம் எனவும், கடற்படை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து ஆராய நீர்மூழ்கி வீரர்களை ஈடுபடுத்தி மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கடற்படை தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை அளவில் MT New Diamond எண்ணெய்க் கப்பலில் இரண்டாவது தடவையாக ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கப்பல் தற்போது சங்கமன்கண்டி பிரதேசத்தில் இருந்து 41 கடல்மைல் தொலைவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் – டொனால்ட் ட்ரம்ப்

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடனுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்...

வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா வைரஸ்  அச்சநிலைமை காரணமாக  வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள்  277 பேர் நாடு திரும்பியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா சென்றிருந்த இலங்கையர்கள்  ஐந்து விசேட விமானங்களில் இன்று அதிகாலை இவ்வாறு நாடு...

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 31 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் – அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்குவதற்கு தடை

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடாக பட்ட கற்கைநெறிக்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சான்றிதழ்களை வழங்குவதற்கான...

யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

“கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டின் எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தின் யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம்  நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கமைய, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட...

Developed by: SEOGlitz