New Diamond கப்பலில் மீண்டும் ஏற்பட்ட தீப்பரவல் வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படை ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது
எனினும், அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் தொடர்ந்தும், வெப்ப நிலை மற்றும் எரிவாயுக் கசிவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக New Diamond கப்பலில் கடந்த ஏழாம் திகதி, மீண்டும் தீப்பரவல் ஏற்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பனாமா நாட்டின் தேசிய கொடியுடன், குவைட் நாட்டிலிருந்து இந்தியா நோக்கிப் பயணித்திக் கொண்டிருந்த New Diamond கப்பல், கடந்த மூன்றாம் திகதி, இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளானது.
அம்பாறை சங்கமன்கண்டி இறங்குதுறைக்கு அப்பால் உள்ள 38 கடல் மைல் தொலைவில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருந்தது.
எனினும், பாரிய பிரயத்தனங்களுக்கு மத்தியில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோதிலும், குறித்த பகுதியில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, கடந்த ஏழாம் திகதி மீண்டும் தீப் பரவல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.