மெய்ப்பொருள் காண்பது அறிவு

அபிவிருத்தித் திட்டங்கள் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்க வேண்டும்!

- Advertisement -

அபிவிருத்தித் திட்டங்கள் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கக்கூடிய வகையில்  அமைய வேண்டும்.

ஆனால், நாட்டின் சில பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள் ஒரு சிலருக்கு நன்மை பயக்கும் வகையில் அமைந்துள்ளதுடன், மேலும் சிலரை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

- Advertisement -

இவ்வாறான நிலையில், மேல் மாகாணத்துக்கு உட்பட்ட அவிசாவளை மற்றும் சீதாவாக்கை பிரதேச  மக்களுக்கு குடிநீரை வழங்கும் வகையில், சீதாவாக்கை கங்கையில் இருந்து பெறப்பட்ட நீரை சுத்திகரிப்பதற்காக  நீர் விநியோக சபையினால் அவிசாவளை – பென்றித் தோட்ட குடியிருப்புப் பகுதியை அண்மித்து நீர் சுத்திகரிப்பு நிலையமொன்று அமைக்கப்பட்டது.

இவ்வாறு அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் ஊடாக 2009 ஆம் ஆண்டு முதல் இன்றுவரையிலும் அவிசாவளை மற்றும் சீதாவாக்கை பிரதேச  மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், குறித்த  நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 9ஆம் திகதி குளோரின் வாயு கசிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட  75 குழந்தைகள் உள்ளடங்களாக 340 பேர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

அவிசாவளை நகரில் இருந்து 3 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பென்றித் தோட்டத்தில் வாழும் சுமார்  400 குடும்பங்களில்,  பெரும்பாலானவர்கள் இறப்பர் பால் வெட்டும் தொழிலையே செய்து வாழ்க்கை நடாத்துகின்றனர்.

வருமானப் பற்றாக்குறையினால் சிக்கித்தவித்த இந்த மக்கள், குடியிறுப்பு, குடிநீர்,  மருத்துவம் மற்றும் போக்குவரத்து என அனைத்து அடிப்படை வசதிகள் இன்றியும் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில்,  மரத்தில் இருந்து விழுந்தவர்களை மாடு முட்டிய கதையாக ஏற்கனவே வறுமைக்கோட்டுக்கு கீழ் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் இந்த மக்கள், குறித்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட குளோரின் கசிவினால்  7 வருடங்களாக உடல் மற்றும் உள ரீதியில்  பல துன்பங்களை அனுபவித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

பென்றித் தோட்ட மக்கள் எதிர்கொண்ட  இந்தப் பிரச்சினை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில்,   பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான குடியிருப்புகளை அமைத்துக்கொடுக்குமாறு தீர்வு முன்வைக்கப்பட்டது.

இருப்பினும், இன்று வரை இவர்களுக்கு பாதுகாப்பான வாழ்விடங்களோ அல்லது நிவாரணமோ வழங்கப்படவில்லையென இந்த மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அத்துடன், பாதுகாப்பான இடங்களை பெற்றுத்தருவதாக வாக்குறுதி வழங்கிய அரசியல்வாதிகளும் இன்று வரையில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவில்லையென பாதிக்கப்பட்ட மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், பென்றித் தோட்டத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்  அமைந்திருக்கின்ற போதிலும், இந்தப் பகுதி  மக்களுக்கு  இதுவரை குடிநீர் விநியோகிக்கப்படல்லை.  சேறும் சகதியுமான நீரையே  இவர்கள் அருந்துகின்றனர்.

இவ்வாறு இன்னல்களுக்கு மத்தியில் உயிராபத்துடன், நிம்மதியாக ஒருவேளை உணவைக்கூட உண்ண முடியாமல், உறங்க முடியாமல் வாழும்  தமக்கு  பாதுகாப்பான குடியிருப்பினை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பதுவே பாதிக்கப்பட்ட அவிசாவளை – பென்றித் தோட்ட மக்களின் ஏகோபித்த கோரிக்கையாக இருக்கின்றது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண் துஷ்பிரயோகம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில்...

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

Developed by: SEOGlitz