மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரேமலால் ஜயசேகரவின் நியமனம் குறித்து: நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்!

- Advertisement -

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது,  சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள  பிரேமலால் ஜயசேகரவுக்கு, நாடாளுமன்ற  அமர்வுகளில் பங்கேற்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

- Advertisement -

பிரேமலால் ஜயசேகரவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த  ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், நேற்றைய தினம் இந்த அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கமைய, இன்றைய அமர்வில் கலந்து கொள்வதற்காக பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற வளாகத்திற்கு இன்று காலை அழைத்துவரப்பட்டார்.

இதனை அடுத்து, பிற்பகல் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வின்போது, அவர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்ததை அடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளிதுமளியில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து, எதிர்க் கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்‌ஷ்மன் கிரியெல்ல ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார்.

உயர்நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் இன்று உங்கள் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்ய முயற்சி செய்தார். இவ்வாறான சம்பவமொன்று 2010ஆம் ஆண்டு இந்த நாடாளுமன்றத்தில் நிகழ்ந்துள்ளது. 2010ஆம் ஆண்டில் சரத் பொன்சேகாவை நாம் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவர முயற்சித்தபோது, அரசாங்கத்தின் சார்பில் ஜீ.எல். பீரிஸ் பேசினார். அரசியலமைப்பின் 89ஆவது பிரிவின்படி, உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த உடன், நாடாளுமன்ற உறுப்பினரின் ஆசனம் இழக்கப்படும் என அவர் கூறினார். மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் நாடாளுமன்ற ஆசனம் தானாகவே இழக்கப்படும் என அவர் தெளிவாகக் கூறினார். அவ்வாறான ஒரு விடயத்துக்கு கருத்து வெளியிடும் உரிமை சபாநாயகருக்கு இல்லை எனவும், ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். சரத் பொன்சேகாவை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவருவதற்கு எதிராக அவர் கதைத்தார். நீங்களும் பேசினீர்கள். இது தொடர்பான சட்டம் மிகவும் தெளிவாகவே உள்ளது என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

இதற்கு, ஆளுங்கட்சியின் சார்பில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமே ஒழுங்குப் பிரச்சினைக்கு இவ்வாறு பதிலளித்தார்.

எதிர்க்கட்சியினர் இந்த இடத்தில் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக அலரி மாளிகையில் இருந்துகொண்டு, வழக்குத் தாக்கல் செய்து, வழக்குகளை சோடித்து, நீதிபதிகளிடம் உரையாடி மக்களை சிறைக்கு அனுப்பிய அரசாங்கம் இன்று நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை குறித்து பேசுகிறது. வழக்குத் தாக்கல் செய்ய, வழக்குகளை சோடிக்க தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் கூறினார். பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை ஆணைக்குழுவுக்கு கொண்டு சென்றார்கள். இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்த நபர்கள் நீதிமன்றம் குறித்து பேசுகிறார்கள். நீதிமன்றத்துக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நாம் பார்த்தோம். நீதியரசர்களுடன் உரையாடினார்கள். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கருத்து வெளியிட்டார், முன்னாள் சொலிசிட்டரும் கருத்து வெளியிட்டிருந்தார். இதுவா நீதிமன்றம்? இன்று அவர்கள் குழந்தைகள் போல கறுப்பு உடை அணிந்து நாடாளுமன்றத்தில் பேசுகிறார்கள். உயர் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இது. ஆகவே உங்கள் தீர்மானம் சரியானது. தனது தந்தையான இராணுவத் தளபதிக்கு மகன் பொருட்கள் கொண்டுவந்து கொடுத்தார். அது சட்டவிரோதமானது. அதற்காகவே, இராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனை யாரும் பேசுவதில்லை.

இதேவேளை, பிரேமலால் ஜயசேகரவின் பதவிப்பிரமாணத்தை தொடர்ந்து  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சட்டமொன்றை  உருவாக்கும் நடவடிக்கைகளில், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டவர்கள் பங்கேற்பது பொருத்தமான ஒரு விடயமல்லவென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

சட்டத்தை உருவாக்குவதற்காக அல்லது வாக்களிப்பதற்காக நாட்டில் குற்றசாளிகளுக்கு விதிக்கக்ப்படும் அதிகூடிய தண்டனை வழங்கப்பட்ட ஒருவருக்கு வாய்ப்பளிக் கூடாது. அவ்வாறு அனுமதிப்பது பொருத்தமானது இல்லை. 1989 பிரகு தற்போது 31 ஆண்டுகள் கடந்துள்ளன. ம`ிந்த ராஜபக்ஸ 10 ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்தார். தற்போது பிரதமராகவும் இருக்கின்றார். ஆகவே தயவு செய்து இது வரை இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து தண்டனைகளை பெ ற்றுக்கொடுங்கள். இடமொன்றை பெற்றுக்கொடுத்ததற்காக அனுமதியை பெற்றுக்கொடுத்து அதற்காக இலஞ்சம் கோரி தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட ஒருவரே தற்போது தற்போது சத்தமிடுகின்றார். மாகாணசபையில் ஒரு நிலத்தை கட்டிட நிர்மானத்திற்காக இலஞ்சம் வழங்காமை குறித்து அதிகாரிகளை அச்சுறுத்திய ஒருவரே தற்போது எனக்கு இடைளுறு விளைவிக்கின்றார். புதிய நபர்கள் பற்றிபெரிதாக தெரியவில்லை. அவர்கள் பற்றியும் தேடியறிய வேண்டும். ஆகவே தயவு செய்து பழைய முகங்கள் எழுந்து எதிர்ப்பை வெளிப்படுத்துங்கள். அவ்வாறு உண்மைகளை சொல்ல எனக்கு மிகவும் விருப்பம்.

சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தமக்கு நாடாளுமன்றத்தில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும், மரணதண்டனை வழங்கப்பட்ட ஒருவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறித்து சபாநாயகர் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேக்கா வலிளுறுத்தினார்.

எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு சிறைதண்டனை வழங்க்ட்டது முன்னாள் ஜனாதிபதி ம`ிந்த ராஜபக்ஸ காலத்தில். நான் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் சிறைக்கு சென்றேன். ஆனால் சிறைக்கு சென்று மரணதண்டனை விதிக்கபட்ட ஒருவர் தற்போது உறுப்பினராக பிரமானம் செய்தார். மக்கள் அவரை தேர்ந்தெடுத்துள்ளதன் காரணமாக அவர் நாடாளுமன்றத்தில் பிரமானம் செய்ய முடியுமென மாத்திரமே நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பது தொடர்பில் சபாநாயகரே தீர்மானிக்க வேண்டும். ஆனால் சாதாரண சிறைத்தண்டனன்கு கூட அப்போதைய சபாநாயகர் அனுமதி  வழங்க வில்லை. அந்த சபாநாயகர் தற்போது அவையில் உள்ளார். ஆகவே உங்கள் பக்கம் பந்து பரிமாற்றப்பட்டுள்ளது. ஆகவே நீங்களே தீர்மானிக்க வேண்டும் அவருக்கு வாக்களிக்க அனுமதி வழங்க போவதா இல்லையா என்பதை.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று ஆரம்பம்

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். அத்துடன், இன்றைய தினத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பஸ்சேவை முன்னெடுக்கப்படுமெனவும், நாளை முதல்...

ஜப்பானில் இருந்து 7 லட்சத்துக்கும் மேற்பட்ட அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது இதன்படி, 7 லட்சத்து 28 ஆயிரத்து 460 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள்...

வாகன விபத்தில் பிரபல நடிகை காலமானார்

லிந்துலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிரபல நடிகை காலமானார் சிரேஷ்ட நடிகை ஹயசிந்த் விஜேரட்ன தனது 75 ஆவது வயதில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த நடிகை பயணித்த கார் நுவரெலியா தலவாக்கலை...

Developed by: SEOGlitz