மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகள் விரைவில் தீர்வு!

- Advertisement -

யாழ் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என கிராமிய வீடமைப்பு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவிக்கின்றார்.

கிராமிய வீடமைப்பு, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த யாழ்ப்பாணத்திற்கு இன்று  விஜயம் செய்திருந்தார்.

- Advertisement -

இதற்கமைய, யாழ் மக்களின் மீள்குடியேற்ற பிரச்சினைகள் தொடர்பாக கிராமிய வீடமைப்பு, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவுடன் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் விசேட சந்திப்பொன்றினை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன், இன்று காலை 10 மணியளவில் சுன்னாகம் சபாபதி நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்களுடன் “சொந்த காணிகளில் மீள் குடியேற்றல்” தொடர்பான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து, ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, கிராமிய வீடமைப்பு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்கள் அன்று முதல் பதிவாகியிருந்த தமது காணிகளை கோருகின்றார்கள்.கடந்த காலங்களில் இந்தப் பகுதியில் காணப்பட்ட சில மக்கள் பிரதிநிதிகள் மக்களை கஷ்டத்திற்கு இழுத்து சென்றுள்ளார்கள்.இந்த நிலையில். நாம் அவற்றை கண்டறிந்து பாதுகாப்புக்கும் மக்களுக்கும் பாதிப்புகள் ஏற்படாத வண்ணமும், மக்கள் தமது ஜீவனோபாயத்தை முன்கொண்டு செல்லும் வகையிலும், அவர்களுக்கான காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை தற்போது செயற்படுத்தியுள்ளோம்.அது தொடர்பில் ஆராய்வதற்காகவே இன்று நாம் இங்கு வருகை தந்தோம்.

அத்துடன், குருநகர் ஐந்துமாடி குடியிருப்பு கழிவகற்றல் பிரச்சினை மற்றும் குடிநீர் பிரச்சனை தொடர்பில் விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் கிராமிய வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்  இந்திக்க அநுருத்த தெரிவித்தார்.

குருநகர் ஐந்து மாடி குடியிருப்பு பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் இராஜாங்க அமைச்சர்  இந்திக்க அநுருத்தவின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவில்  யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற கலாசார மத்திய நிலையத்திற்கும்  இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இன்றைய தினம் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, கட்டுமானங்கள் நடைபெற்று முடிந்துள்ள கலாசார நிலையம் பார்வையிடப்பட்டதுடன், மேற்கொள்ள வேண்டிய இறுதி வேலைத்திட்டங்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பூக்கள் உற்பத்தி அதிகரிப்பு குறித்து சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்ட தகவல்!

நாட்டில் பூக்கள் உற்பத்தியை அதிகரிக்க 23 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பூச் செடிகள் மற்றும் ஏனைய பொருட்களை பூக்களை உற்பத்தி செய்வோருக்கு இலவசமாகப் பெற்றுக் கொடுக்க இந்த தொகை பயன்படுத்தப்படும்...

நாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 360 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வருகை தந்த...

CSK அணி குறித்து வெளியான தகவல்!

சுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பமாட்டார் என, அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார. தற்போது நடைபெற்றுவரும் IPL தொடரில் பங்கேற்பதற்காக சுரேஷ் ரெய்னா ஐக்கிய...

20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையுமில்லை: ம.வி.மு கருத்து!

20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த முன்னாள் நாடாளுமன்ற சுனில் ஹந்துனெத்தி இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS ·...

தேசிய பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!

தேசிய பால் உற்பத்தியை 70 வீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த பால் தேவையில் 40 வீதம் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களின் மூலமும், மிகுதி 60 வீதம் இறக்குமதி செய்யப்படும்...

Developed by: SEOGlitz