பொதுமக்கள் சேவையினை பிரதி திங்கட்கிழமைகளில் முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பொதுமக்கள் சேவை தினமாக திங்கட்கிழமையை அறிவிக்குமாறு முன்வைக்கப்பட்டிருந்த அமைச்சரவை பத்திரத்திற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தின் இன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை இதுவரையான காலப்பகுதியில் பிரதி புதன் கிழமைகளில் பொது மக்கள் சேவை தினம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.