மெய்ப்பொருள் காண்பது அறிவு

பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளை இல்லாதொழிப்பதற்கு தீர்மானம்!

- Advertisement -

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளை இல்லாதொழிப்பதற்கு புலனாய்வு பிரிவினரின் உதவிகளை பெற்றுக் கொள்ளவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவற்கு பாதுகாப்பு செயலாளர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும்  பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் அனைத்து பகிடிவதை சம்பவங்களும் புலனாய்வு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பகிடி வதையுடன் தொடர்புடையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  பல்கலைகழகங்களில் புதிய மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டதன் பின்னர், அவர்களது இணக்கமின்றி முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளும் பகிடிவதை என கருதப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் அதிகரிக்கும் அச்சநிலை – 873 பேருக்கு கொரோனா – உயிரிழப்பும் அதிகரிப்பு…!

நாட்டில் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றையதினம் 873 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்ட நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது, பேலிய கொடை கொரோனா கொத்தணியுடன தொடர்புடைய 866 பேரும்,...

நுவரெலியா மாவட்டத்தில் 16 பாடசாலைகளுக்கு தேசிய பாடசாலை அந்தஸ்து!

நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள 16 தமிழ்ப் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விடயத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர்...

இந்தியாவிலிருந்து தடுப்பூசி கொள்வனவு செய்வதற்கான ஆவணங்கள் சட்டமா அதிபரிடம்!

இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசியைக் கொள்வனவு செய்வதற்கு தேவையான ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். குறித்த கொள்வனவு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான சட்ட ரீதியான அனுமதியைப்...

தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா – அதிகரிக்கும் தொற்றாளர்கள்..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 337 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது. பேலியக்கொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 330 பேரும், கைதிகள் 7 பேரும் இவ்வாறு தொற்றுடன்...

மலேசியாவில் நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு எதிர்க்கட்சியினால் கோரிக்கை

மலேசியாவில் நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு அந்தநாட்டு எதிர்க்கட்சித் தலைவர் தத்துக் அன்வர் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார். நம்பிக்கை கூட்டணி மற்றும் ஆளும் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு கடிதம்...

Developed by: SEOGlitz