மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாளை முதல் மீண்டும் அமுலுக்கு வரும் வீதி ஒழுங்கை சட்டம்!

- Advertisement -

வீதி ஒழுங்கை சட்டம் நாளை (14 ) முதல் மீண்டும் அமுலுக்கு வரவுள்ளதாக பொலிஸ் வாகனப் போக்குவரத்து பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய, நாளை காலை 6 மணி முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி காலை 10 மணிவரை கொழும்பின் சில பகுதிகளை மையமாக கொண்டு இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

- Advertisement -

இதன்படி, காலி வீதி, ஹய்லெவல் வீதி, பேஸ்லைன் வீதி மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர – கோட்டே வீதிகளை மையமாக கொண்டு வீதி ஒழுங்கை சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஶ்ரீ ஜயவர்தனபுர வீதியின் பொல்துவ சந்தியிலிருந்து, ஹோர்ட்டன் சுற்றுவட்டம் வரை இந்த சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், பேஸ்லைன் வீதியின் களனி பாலம் முதல் ஹய்லெவல் பேஸ்லைன் சந்தி வரை இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, ஹய்லெவல் வீதியின் அனுலா வித்தியாலயத்திற்கு அருகாமையிலிருந்து சம்புதத்வ ஜயந்தி மாவத்தை, தும்முல்ல சுற்றுவட்டம், தேர்ஸ்டன் வீதி, மாக்ஸ் பிரணாந்து மாவத்தை, நூலக சந்தி, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, மல்பார சந்தி மற்றும் பித்தளை சந்தி வரை இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மேலும், காலி வீதியின் வில்லியம் சந்தி முதல் காலி முகத்திடல் வரை இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்று அச்சம் – மூடப்படும் இலங்கைத் தூதரகம்!

குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தூதரகத்தின் தங்குமிட விடுதியிலுள்ள 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குவைத்திலுள்ள இலங்கைத்...

பாடும் நிலாவின் மறைவிற்காக கடற்கரையில் வடிவமைத்த ஓவியம்!

புகழ்பெற்ற பிண்ணனி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்தியாவின் ஓடிசா மாநிலத்தில் புரி கடற்கரையில் எஸ்.பி.பி யின் படத்தை வடிவமைத்துள்ளார். இச் சிற்பத்தை சர்வதேச மணற்சிலை வடிவமைப்பாளர் ஒருவர் வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Tribute to legendary...

எஸ்.பி.பி யின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்…..

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல்  அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டம்  தாமரைப்பாக்கத்தில் உள்ள  அவரது பண்ணை இல்லம் பகுதியில்   ராணுவ  மரியாதை அணிவகுப்புக்கள் இடம்பெற்றதுடன்  72  குண்டுகள்...

எஸ்.பி.பி யின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்!

இளையத் தளபதி நடிகர் விஜய் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.  

கொழும்பு நகரில் போக்குவரத்து சட்டவிதிமுறைகளை மீறுவோருக்கு எச்சரிக்கை!

கொழும்பு நகரில் போக்குவரத்து சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட ஆயிரத்து 200 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சாரதிகள் பொலிஸ் தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பஸ் முன்னுரிமை...

Developed by: SEOGlitz