மெய்ப்பொருள் காண்பது அறிவு

சவூதியிலிருந்து இலவசமாக வருகை தர இலங்கைத் தொழிலாளர்களுக்கு அனுமதி!

- Advertisement -

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், சவூதி அரேபியாவிலிருந்து வெளியேறுவதற்கான கட்டணம் மற்றும் அபராதங்களை புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களிடமிருந்து அறவிடாதிருப்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய,  புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களை எந்தவொரு கட்டணமும் அறவிடப்படாது விமான நிலையங்களின் குடிவரவு மையங்களின் வழியாக வெளியேற்றுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

கொரோனா தொற்ற காரணமாக புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளின் அடிப்படையில் சவுதி அரசாங்கத்தினால் தற்காலிகமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவை விட்டு வெளியேற முடியாத, வருகை தரு வீசாக்கள், மீள் நுழைவு வீசா அல்லது இறுதி வெளியேற்ற வீசா அல்லது காலாவதியான வீசாக்களையுடைய எந்தவொரு புலம்பெயர் இலங்கைத் தொழிலாளியும் கட்டணங்கள் இன்றி அனுப்பிவைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய அரசாங்கத்தின் இந்தத் தீர்மானமானது தற்போது நாட்டிற்கு மீளத் திரும்புவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த தீர்மானம் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை வெளிப்படுத்தும் வகையில்  அமைந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்று காலப்பகுதியில், புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவிகளை வழங்கியமைக்காக சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு, இலங்கை அரசாங்கம் நன்றிகளையும் தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று ஆரம்பம்

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். அத்துடன், இன்றைய தினத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பஸ்சேவை முன்னெடுக்கப்படுமெனவும், நாளை முதல்...

ஜப்பானில் இருந்து 7 லட்சத்துக்கும் மேற்பட்ட அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது இதன்படி, 7 லட்சத்து 28 ஆயிரத்து 460 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள்...

வாகன விபத்தில் பிரபல நடிகை காலமானார்

லிந்துலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிரபல நடிகை காலமானார் சிரேஷ்ட நடிகை ஹயசிந்த் விஜேரட்ன தனது 75 ஆவது வயதில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த நடிகை பயணித்த கார் நுவரெலியா தலவாக்கலை...

Developed by: SEOGlitz