நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு இதனைத்தெரிவித்துள்ளது.
குவைத்திலிருந்து நாடு திரும்பிய இருவருக்கு, கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் உள்ள ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 126 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 935 ஆக காணப்படுகின்றது.