மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் கொரோனா தொற்றுகுள்ளானவர்களின் எண்ணிக்கை 2815 ஆக உயர்வு

- Advertisement -

பொலன்னறுவை லங்காபுர பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான  மற்றுமொரு நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

பொலன்னறுவை லங்காபுர பிரதேச சபை பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது

இதனையடுத்து  குறித்த  நபருடன் தொடர்புடையவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட  பி.சி.பரிசோதனைகளில் மற்றுமொரு நபர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில்  கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2  ஆயிரத்து 815  ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், 48 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 413 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதேவேளை  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 391 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அமெரிக்கா; Isaias புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவு

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இசையாஸ் என அழைக்கப்படும் வெப்பமண்டல புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணிக்கு 100 km  வேகத்தில் வீசிய இந்த புயல் காரணமாக அமெரிக்காவின் அட்லாண்டிக்...

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி  பிரித்தானியாவில்  Southampton மைதானத்தில்  நேற்று மாலை 6.30...

3 அரை வயதுடைய மகளை கொலை செய்தமைக்காக தந்தைக்கு மரண தண்டனை

3 அரை வயதுடைய மகளை கழுத்தை நெறித்து கொலை செய்தமைக்காக குழந்தையின் தந்தைக்கு  நுவரெலிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது நுவரெலிய மேல் நீதிமன்றம் நீதிபதி பிரமிர ரத்னாயக்கவினால் மரண் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது 2014...

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் Ahmed Ali Al Mualla மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோருக்கிடையிலான பிரியாவிடை சந்திப்பு நேற்று இடம்பெற்றது. வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த...