மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 சிறைச்சாலை அதிகாரிகள் பணி நீக்கம்

- Advertisement -

பல்வேறு  ஊழல் சம்பவங்களுடன்  தொடர்புடைய சந்தேகத்தின் பேரில்  15 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக  சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த  சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதன்படி  மஹர மெகசின்  பூஸ்ஸ கொழும்பு வெலிக்கட காலி நீர்கொழும்பு வாரியபொல  மற்றும்  அங்குனுகொலபெலஸ்ஸ  ஆகிய சிறைச்சாலைகளில் பணியாற்றும்  அதிகாரிகள் இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் புலனாய்வு பிரிவு மற்றும்  பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றினால்  முன்னெடுக்கப்பட்ட  ஆரம்பகட்ட விசாரணைகளுக்கமைய   இவ்வாறு பணிநீக்கம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய   நிலையில் நீர்கொழும்பு மற்றும்  பூஸ்ஸ ஆகிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலருடன்  தொடர்பை பேணிய  19 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய  நீர்கொழும்பு சிறைச்சாலையில் 9 பேரும்  பூஸ்ஸ சிறைச்சாலையில் 10 பேரும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சிறைச்சாலைகளுக்கு இடம்பெறுகின்ற மோசடி சம்பவங்கள் தொடர்பில் 0112 67  86 00  எனும்  தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை   வழங்கமுடியும் எனவும்  சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய இதன் போது  சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மடகஸ்காரில் இருந்து வருகைத்தந்த ஒருவர் மற்றும் ஓமானில் இருந்து வருகை...

இஸ்ரேலுடன் நல்லுறவுகளை ஏற்படுத்துவதற்கு மேலும் ஐந்து நாடுகள் பரிசீலனை!

மத்திய கிழக்கில் இஸ்ரேலுடன் நல்லுறவுகளை ஏற்படுத்துவதற்கு மேலும் ஐந்து நாடுகள் பரிசீலித்துவருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி Mark Meadows  வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே Wisconsin...

கடற்றொழிலாளர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதற்கமைய, மட்டக்களப்பு முதல் திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் புத்தளம் ஊடாக, கொழும்பு வரையில் காற்றின் வேகம் அதிகரித்து...

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு ஏற்பட்ட வருமான இழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு 14 பில்லியன் அமெரிக்க டொலர் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக fifa தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 6 மாதங்களின் பின்னர்...

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை : கமல் குணரட்ன!

அரச நிறுவனங்களில் மோசடியில் ஈடுபட்ட  அனைத்து தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்...

Developed by: SEOGlitz