மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய நாடாளுமன்றத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் எட்டுப் பெண் வேட்பாளர்கள்

- Advertisement -

இம் முறை பெண் வேட்பாளர்கள் எட்டுப் பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்ற இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலில் 59 பேர் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர்.

- Advertisement -

இந்த நிலையிலேயே, எட்டுப் பெண் பிரநிதித்துவம் இம் முறை நாடாளுமன்றத்துக்கு தகுதி பெற்றுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் கம்பஹா மாவட்டத்திலிருந்து போட்டியிட்ட சுதர்ஷனி பெர்ணாண்டோ புள்ளே, 89 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட கோகிலா ஹர்சனி 77 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்கு தகுதி பெற்றுள்ளார்

மேலும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக மாத்தளை மாவட்டத்தில் போட்டியிட்ட ரோஹினி குமாரி கவிரத்ன 27 ஆயிரத்து 587 வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் காலி மாவட்டத்தில் போட்டியிட்ட கீதா குமாரசிங்க 63 ஆயிரத்து 358 வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட பவித்ரா வன்னியாராச்சி இரண்டு லட்சத்து தொள்ளாயிரத்து 77 வாக்குகளுடன் இம் முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய, பவித்ரா வன்னியராச்சி இரத்தினபுரி மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்ககளைப் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவான தலதா அத்துக்கோரல 45 ஆயிரத்து 105 வாக்குகளைப் பெற்றுக் கொண்டிருந்தார்.

மேலும், கேகாலை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட ராஜிகா விக்ரமசிங்க 68 ஆயிரத்து 802 வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.

இதேவேளை, 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் 12 பெண் பிரதிநித்துவம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 90 வீதமான வாகனங்கள் விற்பனை!

நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 90 வீதமான வாகனங்கள் விற்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தநிலை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு தொடருமென தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், குறிப்பிட்ட...

ஐ.தே.க வின் பொதுச் செயலாளர் பதவி துறக்க தீர்மானம்!

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியைத் துறப்பதற்கு தான் இதுவரை தீர்மானிக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவிக்கின்றார். எவ்வாறாயினும், கட்சியின் மேம்பாட்டுக்காக பொதுச் செயலாளர் பதவியில் மாற்றம்...

கண்டி கட்டட விபத்து – மேலும் இருவர் உயிரிழப்பு!

கண்டி - பூவெலிகட பிரதேசத்தில் இடிந்து வீழ்ந்த கட்டடத்தில் சிக்குண்டிருந்த இருவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த இருவரும் இன்று காலை மீட்கப்பட்டு பின்னர் உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் விநியோக கட்டமைப்புகள் சேதம்!

நாட்டில் குடிநீர் விநியோகத் திட்டங்களின் ஊடாக நிர்மானிக்கப்பட்ட நீர்வழங்கல் கட்டமைப்புகள் அரைவாசிக்கும் மேற்பட்டவை சேதமடைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு நடத்திய ஆய்வின் மூலம் இந்த விடயம்...

அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்!

காடழிப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்தியுள்ளார். ஹம்பாந்தோட்டைப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக்...

Developed by: SEOGlitz