மெய்ப்பொருள் காண்பது அறிவு

வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம்!

- Advertisement -

இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் தமது பிரதேசங்களில் உள்ள தபால் நிலையங்களுக்குச் சென்று தமது வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,  தேர்தலுக்கு முந்தைய நாளும் தேர்தல் தினத்தன்றும் தங்களது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியுமென தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இந்த நிலையில், வாக்காளர்களின் முகவரிகளை கண்டறிய முடியாத நிலையில் 4 இலட்சத்து 50 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் மீண்டும் தபால் அலுவலகங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய,  வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் தபால் அலுவலகங்களுக்கு சென்று தங்களை அடையாளப்படுத்தக் கூடிய ஆவணங்களை சமர்ப்பித்து வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளுமாறும் தபால்  திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

இதேவேளை,  வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை நூற்றுக்கு 99 வீதம் நிறைவடைந்துள்ளதாக  தபால்  திணைக்களம் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் – இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் - இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு  

மாலைதீவிலிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் மாலைதீவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மாலைதீவின் மாலே நகரில் இருந்து மத்தளை விமான நிலையம் நோக்கி...

புதிய நாடாளுமன்றத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் எட்டுப் பெண் வேட்பாளர்கள்

இம் முறை பெண் வேட்பாளர்கள் எட்டுப் பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்ற இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலில் 59 பேர் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இந்த...

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு வருகை

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த  இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இருந்து மத்தள  விமான நிலையம் நோக்கி பயணித்த யு எல்  1160 எனும் விமானமூடாக குறித்த இலங்கையர்கள் இன்று மதியம்  2...