மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொதுத் தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவு

- Advertisement -

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன.

இதற்கமைய,  இன்று நள்ளிரவு முதல் பிரசார பேரணிகள், வீடுகளுக்கு சென்று   முன்னெடுக்கப்படும் பிரசார நடவடிக்கைகள்,  துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல், வேட்பாளர்களின் விளம்பர பலகைகள்  காட்சிப்படுத்தல்  மற்றும் சுவரொட்டிகள் விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதேவேளை,  கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள  கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாக எதிர்வரும் 3 ஆம் திகதி வரை பிரசார நடவடிக்கைகளை நீடிக்குமாறு தேர்தல்கள்  ஆணைக்குழுவில்  கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும் சட்ட விதிமுறைகள் மற்றும் ஏனைய தரப்பினரின்  எதிர்ப்பு காரணமாக பிரசார நடவடிக்கையினை நீடிப்பதற்கான  கோரிக்கை  தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சிகள், குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள்  சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்த்து செயற்படுவதோடு சுதந்திரமானதும் நியாயமானதுமான பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு   தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் – இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் - இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு  

மாலைதீவிலிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் மாலைதீவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மாலைதீவின் மாலே நகரில் இருந்து மத்தளை விமான நிலையம் நோக்கி...

புதிய நாடாளுமன்றத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் எட்டுப் பெண் வேட்பாளர்கள்

இம் முறை பெண் வேட்பாளர்கள் எட்டுப் பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்ற இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலில் 59 பேர் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இந்த...

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு வருகை

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த  இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இருந்து மத்தள  விமான நிலையம் நோக்கி பயணித்த யு எல்  1160 எனும் விமானமூடாக குறித்த இலங்கையர்கள் இன்று மதியம்  2...