மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆட்டநிர்ணயக் குற்றச்சாட்டு விவகாரத்தை எதிர்க்கட்சி அரசியலாக்கியுள்ளதாக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு

- Advertisement -

2011ஆம்  ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளின் இறுதிப்  போட்டியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஆட்ட நிர்ணயத்துடன் தொடர்புடையவர்கள் அதிலிருந்து தப்பிக்க பாரியளவில் நிதியினை செலவிட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றம் சுமத்துகின்றார்,

நாவலபிட்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்

- Advertisement -

என்னுடைய குற்றச்சாட்டுக்கு வீரர்களுக்கு தொடர்பில்லை என்பதை எனது வாக்குமூலத்திலும் நான் தௌிவாகக் கூறினேன்,ஆனால் பொலிஸார இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோரை எந்த அடிப்படையில’ இந்த விசாரணைக்கு  அழைத்தனர் என்பது எனக்கு தெரியாது.தற்போதுள்ள சட்டத்தின் கீழ் இந்த விசாரணையை தற்போது முன்னெடுக்க முடியாது  என விசேட விசாரணைப் பிரிவின் பிரதானி எனக்கு கூறுகின்றார்,ஆட்ட நிர்ணய சதி தொடர்பிலான சட்டம் 2019 ஆம் ஆண்ட கொண்டுவரப்பட்டது,ஆனால் இந்த சம்பவம் 2011 ஆம் ஆண்டெ இடம்பெற்றது,தாம் இந்த விடயம் தொடர்பில் விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை என குமார் சங்ககாரவின்’ சட்டத்தரணி தெரிவித்துள்ளார்,ஏனெனில்’  இந்த சட்டம் தவறு என  அவர் சுட்டிக்கா்ட்டியுள்ளார்,ஆகவே பொலிஸார் தவறான விசாரணையொன்றை முன்னெடுத்துள்ளனர்,இதுவரை பொலிஸார் தேர்வுக்குழுத் தலைவரிடம் மாத்திரம் தான் வாக்குமூலம் பெற்றுள்ளனர்,அப்போதிருந்த ஶ்ரீலங்கா கிரிக்கட்டின் செயலாளரிடம் வாக்குமூலம பெற்றாளர்களா? தலைவரிடம்  பெற்றாளர்களா?நிறைவேற்று அதிகாரியிடம் வாக்குமூலம் பெற்றாளர்களா? அந்தப் போட்டியுடன் தொடர்புடைய எந்த அதிகாரியிடமும் வாக்குமூலம் பெறவில்லை,நான் மிகத் தௌிவாக யாரிடம் வாக்குமூலம் பெற வேண்டுமெனக் கூறியிருந்தேன்.இருவரிடம் வாக்குமூலம் பெற்று விசாரணையை நிறைவு  செய்ய முடியுமா இதனைத் தான் பொலிஸார் கடந்த காலங்களிலும் செய்தனர்,இதன் பாரதூரத்தினாலேயே நான் வாக்குமூலம் அளித்தேன்,சர்வதேச கிரிக்கட் பேரவையினாலேயே இது தொடர்பில் விசாரிக்க வேண்டும’.அது தொடர்பான தரவுகளை வழங்கியுள்ளேன்,பொலிஸ் ஊடகப் பேச்சாளரினால் ஒரு கீழ்த் தரமான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நான் ஜனாதிபதியிடம் கூறினேன்,இது தொடர்பில் பூரண விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு நான் ஜனாதிபதியிடம் கோரிஈனேன்,பொலிஸார் தமது தவறை மறைக்க என் மீது இந்த குற்றச்சாட்மட முன்வைக்கின்றனர்.எனது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை.நான் சர்வதேச கிரிக்கட்’ பேரவையின் அலெக்ஸ் மார்ஷலுக்கு இது தொடர்பான தகவல்களையும் ஆதாரங்களையும் வழங்கி வருகின்றேன்,நான் இதனை அரசியலாக்க வேண்டாம் எனக் கூறியுள்ளேன், எதிர்க்கட்சியினர் இதனை அரசியலாக்கியுள்ளார்,இதனுடன் தொடர்புடையவர்களை இதிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ள பாரியளவில் நிதி செலவிடுகின்றனர். 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மகனுக்கு பிணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது நபர் ஒருவரை பணம் கேட்டு அச்சுறுத்தியமை மற்றும் நபர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் மாலக்க சில்வா...

புதிய அமைச்சரவைக் கூட்டத்தில் விசேட கவனஞ் செலுத்த வேண்டியவை!

புதிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, இரண்டு விடயங்கள் குறித்து விசேட கவனஞ் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் புதிய வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பது தொடர்பான விடயங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக...

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 638 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் குணமடைந்ததை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2...

லெபனானிற்கு நிவாரணங்களை அனுப்பி வைப்பதற்கு தீர்மானம்!

லெபனான் பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தை அடுத்து லெபனான் நாட்டிற்கு நிவாரணங்களை அனுப்பி வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் 200 இற்கும் அதிகமானவர்கள்...

மெக்சிகோவின் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் 19 பேரை கைது செய்ய உத்தரவு!

மெக்சிகோ நகரின் முன்னாள் மத்திய காவல்துறை அதிகாரிகள் 19 பேரை கைது செய்யுமாறு அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் நிதிமோசடி குற்றச்சாட்டின் கீழ் குறித்த காவல்துறை அதிகாரிகள் 19 பேரை...