மெய்ப்பொருள் காண்பது அறிவு

அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் மீண்டும் ஆரம்பம்

- Advertisement -

தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கமைய எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அடையாள அட்டையை பெறுவதற்கான ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஆட்பதிவு  திணைக்களம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

கொரோனா வைரஸ் பரவலை  கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைதிட்டங்களுக்கு அமைவாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான ஒரு நாள்  சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அடையாள அட்டையை பெறுவதற்கான ஒரு நாள் சேவையை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் முதல் கட்டமாக பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஆட்பதிவு திணைக்களத்தில்  ஒரு நாளைக்கு 250 பேரும்,  காலியில் அமைந்துள்ள  அலுவலகத்தில் 50 பேரும் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கான  விண்ணப்பப் படிவங்களை கிராம சேவையாளரிடம் சான்றுப்படுத்தி பிரதேச செயலகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டுமெனவும்  குறுப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, காய்ச்சல், சளி தலைவலி போன்ற அறிகுறிகள் காணப்படுபவர்கள் குறித்த ஒரு நாள் சேவையில் கலந்துகொள்ள வேண்டாமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாவீரர் தினம் குறித்து செய்தி வெளியிட்டோருக்கு நடந்தது என்ன? பொலிஸார் விளக்கம்!

மாவீரர் தினத்தை போற்றும் வகையில், சமூக வலைத்தளத்தில் செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டில், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, குறித்த நபர்கள் செங்கலடி பகுதியில் வைத்து, நேற்றைய தினம் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக,...

35 ஆவது பொலிஸ்மா அதிபராக பதவியேற்கின்றார் சி.டி விக்ரமரத்ன!

இலங்கை பொலிஸ் சேவையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக, சி.டி விக்ரமரத்ன இன்றைய தினம் பதவியேற்கவுள்ளார். இதற்கமைய, அவர் இன்று காலை பொலிஸ் தலைமையகத்தில் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப்...

PCR தொடர்பில் பண்டாரகம பிரதேச சபைத் தலைவர் முன்வைக்கும் குற்றச்சாட்டு!

பண்டாரகம - அட்டுலுகம பகுதியில், பல தரப்பினர் PCR பரிசோதனையை தவிர்த்து செயற்படுவதாக பண்டாரகம பிரதேச சபைத் தலைவர் தேவேந்திர பெரேரா தெரிவித்துள்ளார். அட்டுலுகம பகுதியில் இதுவரை 164 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக...

பிரான்ஸ் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி இடைநிறுத்தம்- காரணம் என்ன?

பிரான்ஸில் PARRIS நகரில்  கறுப்பு இனத்தவரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அந்தநாட்டு பொலிஸ் அதிகாரிகள் மூவர், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் கருப்பினத்தைச் சேர்ந்த இசைத் தயாரிப்பாளர் ஒருவரை PARRIS பொலிஸ் அதிகாரிகள் தாக்கிய சம்பவம், காணொளி...

99 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு – முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 99 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை நேற்று நள்ளிரவு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

Developed by: SEOGlitz