எதிர்வரும் திங்கட் கிழமை முதல் ரயில் சேவைகள் வழமைப்போல் இடம்பெறுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சம் அதிகரித்திருந்தபோது, நாடளாவிய ரீதியில் ரயல் சேவைகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மேலும், இரவு நேர பிரதான தபால் ரயில்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், மக்களின் இயல்பு வழ்க்கையை மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் நோக்கில் அனைத்து ரயில் சேவைகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க்படப்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வழமையான நேர அட்டவணையில் அனைத்து பகுதிகளுக்குமான ரயில் சேவைகள் திங்கட் கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இத்துடன் உரிய நேரத்தில் இரவு நேர தபால் ரயில் சேவைகளும் அன்றைய தினமே ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், சுகாதார தரப்பினரினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் மிகவும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த அனைத்து மாவட்டங்களுக்குமிடையிலான பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்டவுள்ளன.
இதற்கு அமைவான தேவையான அளவு பேருந்துகளை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படடுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.