மெய்ப்பொருள் காண்பது அறிவு

பல்கலைக்கழக நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

- Advertisement -

நாட்டின் அனைத்து பல்கலைகழகத்தின் இறுதியாண்டு மாணவர்களை மாத்திரம் அழைத்து, அவர்களுக்கான பரீட்சைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் பல்கலைக்கழகங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும், இவ்வாறு ஆரம்பிக்கப்படும் பரீட்சை நடவடிக்கைகள் ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறும் பல்கலைகழக உபவேந்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பரீட்சைகளை முன்னெடுக்கும் போது ஒரு மாணவருக்கு ஒரு பரீட்சை அறை என்ற ரீதியில் பரீட்சைகள் முன்னெடுக்கப்பட்டவுள்ளன.

அத்துடன், பரீட்சை நடவடிக்கைகளின் போது கொரோனா தடுப்புக்கான அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு தனித்தனியான விடுதி அறைகளை பெற்றுக்கொடுப்பதோடு, இரவு 8 மணிக்கு மேல் விடுதி வளாகத்தில் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மறு அறிவித்தல் வரை பல்கலைகழக வளாகத்திற்குள் ஒன்று கூடுதல், எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் மற்றும் விளையாட்டு பயிற்சிகளை முன்னெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பல்கலைகழகங்களுக்கு திரும்பும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசங்களை பயன்படுத்துவதோடு, சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தல் விடுக்கபப்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் – டொனால்ட் ட்ரம்ப்

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடனுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்...

வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா வைரஸ்  அச்சநிலைமை காரணமாக  வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள்  277 பேர் நாடு திரும்பியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா சென்றிருந்த இலங்கையர்கள்  ஐந்து விசேட விமானங்களில் இன்று அதிகாலை இவ்வாறு நாடு...

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 31 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் – அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்குவதற்கு தடை

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடாக பட்ட கற்கைநெறிக்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சான்றிதழ்களை வழங்குவதற்கான...

யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

“கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டின் எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தின் யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம்  நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கமைய, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட...

Developed by: SEOGlitz