மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியல் கட்சிகள் சார்பில் பணிபுரியும் அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை

- Advertisement -

எதிர்வரும் பொதுத் தேர்தலில்  எந்தவொரு அரசியல் கட்சிகளின் சார்பிலும் அரச அதிகாரிகள் எவரும்  அரசியல் பணிகளில் ஈடுபடக்கூடாது என  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிர்வு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

அவ்வாறு அரசியல் பணிகளில் ஈடுபடுவதற்கு விரும்பும் அரச நிறுவனத்தின் தலைவர்கள், பணிப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சட்டபூர்வமாக தனது பதவியை இராஜினமா செய்ய முடியுமென என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அரசாங்கத்திற்காக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டுமென தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசியல் செயற்பாடுகளுக்கு மாறாக அவரவர்கள் பணியாற்றும் அரச நிறுவனங்களை திறமையான, ஊழல் அற்ற, அழுக்கமான, இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக அபிவிருத்தி செய்ய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரச நிறுவனங்கள் பொது மக்களின் பணத்திலேயே நடத்தப்படுகின்ற நிலையில், அவை பொது மக்களுக்கு சுமையாக இருக்கக்க கூடாது என ஜனாதிபதி குறித்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்கள்  மற்றும் வளங்கள் தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் இந்த விதிமுறைகளை மீறும் அரச நிறுவனங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது தலைமையிலான இந்த அரசாங்கத்தில் வலுவானதொரு அரசு,  வளமானதொரு பொருளாதாரம்,  நியாயமான சமூகம் மற்றும் குறுகிய அரசியல் நோக்கங்களில் இருந்து மாறுபட்ட அரசியல் கலாசாரத்தை உறுவாக்குவதே நோக்கமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நோக்கத்தை அடைவதற்கு  அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் முழு ஒத்துழைப்பையும் வழங்குவார்கள் என தாம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யுவனுடன் இணையும் பிரபல நடிகை…! புகைப்படம் உள்ளே…!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் பல படங்கள் வெளியாக இருக்கிறது. தற்போது டாப் டக்கர் என்ற ஆல்பத்தை இசையமைத்து உருவாக்கி வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இந்த இசை...

இன்று இடம்பெற்ற இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. இன்றைய ஆட்டத்தில், தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்களை இழந்து...

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்துள்ளது..!

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்துள்ளது. சர்வதேச ரீதியில் கொரோனா தொற்று பரவல் குறித்து முன்னெடுக்கப்படும் ஆய்வுகளில் இந்த தரவு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி,  சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின்...

நாட்டில் நிலவும் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த 90 வயதான, கிரிபத்கொடை பகுதியை சேர்ந்த  பெண்ணொருவர் இன்று...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் சிலர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 363 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 51 ஆயிரத்து 594 ஆக உயர்வடைந்துள்ளமை...

Developed by: SEOGlitz